பதிவு செய்த நாள்
29 செப்2017
23:41

புதுடில்லி : ‘ஆர்ஜியோ’ நிறுவனம், 1,500 ரூபாய், ‘டிபாசிட்’டில், ‘ஆர்ஜியோ பியூச்சர் போன்’ வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பின், இந்த போனை ஒப்படைத்து, டிபாசிட்டை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
மாதம், குறைந்தபட்சம், 153 ரூபாய் கட்டணத்தில், இலவச அழைப்பு மற்றும் தகவல் பரிவர்த்தனை வசதிஉள்ள இத்திட்டத்தில், தற்போது, புதிய சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, ‘முதலாண்டில், 1,500 ரூபாய்க்கு, ‘ரீசார்ஜ்’ செய்து, போனை திரும்ப ஒப்படைத்தால், டிபாசிட் தொகையில், 500 ரூபாய் பெறலாம்.
இரண்டாவது ஆண்டில், போனை திரும்ப அளித்தால், 1,000 ரூபாயும், மூன்றாம் ஆண்டில் ஒப்படைத்தால், 1,500 ரூபாயும் பெறலாம்’ என, ஆர்ஜியோவின் கூட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தில், ஓராண்டிற்கு, மாதம், 125 ரூபாய் வீதமோ அல்லது ஒருமுறை, 1,500 ரூபாய் செலுத்தியோ, டிபாசிட் தொகையை பெறலாம். இது, ‘2ஜி’ மொபைல் போனுக்கு, குறைந்தபட்ச ரீசார்ஜ் செலவான, 150 ரூபாயை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|