பதிவு செய்த நாள்
01 அக்2017
05:53
பஜாஜ் நிறுவனம், ‘பிளாட்டினா, கம்போர்டெக்’ பைக்கின் புதிய மாடலை, அறிமுகம் செய்துள்ளது. அதிக பரபரப்பு இன்றி, இந்த பைக்கை, டில்லியில், முதலில் காட்சிப்படுத்தி உள்ளது. எனினும், நாட்டில், பெரும்பாலான டீலர்களிடம், இந்த புதிய மாடல் கிடைக்கிறது.இதில், பைக்கை, ‘ஸ்டார்ட்’ செய்தவுடன் ஒளிரும், டி.ஆர்.எல்., எனும், பகல் நேரத்தில் எரியும் விளக்கு, முகப்பு விளக்குக்கு சற்று மேலாக பொருத்தப்பட்டு உள்ளது. இது போல், ஹேண்டிலுக்கு நடுவில் உள்ள, ‘ஸ்பீடோமீட்டர்’ உள்ளிட்டவை அடங்கிய, ‘கிளஸ்டர்’ இதில், சற்று, ‘ஸ்டைலிஷ்’ ஆகவும், சற்று தெளிவாக தெரியும் வகையிலும், திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது. எனினும், பழைய மாடலில் இருந்த அதே, பி.எஸ்., – 4, 102 சிசி டி.டி.எஸ்., இன்ஜின் தான் இடம் பெற்றுள்ளது. கூடுதல் சக்தி உடையதாக, இன்ஜின் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது. சவுகரியமான சஸ்பென்ஷன், பின்னால் அமர்வோர், கால் வைப்பதற்கு அகலமான, ‘புட் பேட்’ என, புதிய வசதிகள் கூடுதல் சிறப்பு.ஷோரூம் துவக்க விலை, 47 ஆயிரம் ரூபாய்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|