பதிவு செய்த நாள்
01 அக்2017
05:54
நிஸான் நிறுவனம், பண்டிகை காலத்தை முன்னிட்டு, தன், ‘டட்சன் – ரெடி கோ’ ரக காரில், ‘கோல்டு’ எனும், புதுப்பிக்கப்பட்ட மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த, ரெடி – கோ கோல்டு, ‘ஐசாட்’ எனும், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, இன்ஜினுடன் வந்துள்ளது. இது, எரிபொருள் சிக்கனத்திற்கு உதவும்.மேலும், தரையில் அடிபடாத வகையில், ‘கிரவுண்ட் கிளியரன்ஸ்’ மற்ற, ‘ஹேட்ச்பேக்’ கார்களை விட, இதில் அதிகமாக உள்ளது. சீட்டுகளின் உயரமும், சற்று கூட்டப்பட்டுள்ளது, சிறப்பம்சம். இந்த காரை வாங்குவோருக்கு, ‘டட்சன் கேர், சர்வீஸ்’ தொடர்பான சலுகைகள் கிடைக்கும். புதிய சக்தி வாய்ந்த இன்ஜினுடன் வந்துள்ள இந்த காரில், கால் வைப்பதற்கு அதிக இடம் தரப்பட்டுள்ளது. இதன், ஷோரூம் துவக்க விலை, 3.69 லட்சம் ரூபாய்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|