பதிவு செய்த நாள்
01 அக்2017
05:54
ருதி நிறுவனம், முதன்முதலில், 2015ல், எஸ் – கிராஸ், எஸ்.யு.வி.,யை அறிமுகம் செய்தது. இப்போது, புதுப்பிக்கப்பட்ட, எஸ் – கிராஸ், எஸ்.யு.வி.,யை, விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதற்கான முன்பதிவு, தற்போது துவங்கி உள்ளது.இதில், முன்புறத்தில் உள்ள, ஹூட், வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. முகப்பில் உள்ள, கிரில், கூடுதல் குரோம் உலோகத்தால் செய்யப்பட்டு உள்ளது. பின்புறத்தில், ஜோடி, சிவப்பு விளக்குகள் மற்றும், எல்.இ.டி., விளக்குகள், அகலமான டயர்கள், நேர்த்தியாக அமைந்துள்ள, ‘மிஷின் பினிஷ்’ உலோகங்கள், இதன் கவர்ச்சியை கூட்டியுள்ளன.மிருதுவான, ‘டச்,’ உடைய, ‘டேஷ்போர்டு, இருக்கையின் புதிய உறை மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே’ வசதிகள் உடைய, தொடுதிரை, இன்போடெயின்மென்ட் போன்றவை, நவீனமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன.‘லெதர் பினிஷ்’ செய்யப்பட்ட, ‘ஆர்ம் ரெஸ்ட், கறுப்பு நிற, சென்ட்ரல் பேனல்’ என, புது அம்சங்கள் ஏராளம். விபத்தின் போது, டிரைவரை, கழுத்து, கால் காயங்களில் இருந்து காக்கும், ‘பிரன்ட்டல் ஆப்செட் கிராஷ்’ உள்ளிட்ட, பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இதன், ஷோரூம் விலை, 9 லட்சம் ரூபாயில் துவங்கி, 11.5 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|