தேசிய சிறு சேமிப்பு திட்டங்கள் வட்டி விகிதத்தில் மாற்றமில்லைதேசிய சிறு சேமிப்பு திட்டங்கள் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ... அன்னிய நிதி நிறுவனங்கள் ஒரே மாதத்தில் அதிக விற்பனை அன்னிய நிதி நிறுவனங்கள் ஒரே மாதத்தில் அதிக விற்பனை ...
பங்கு சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் அறிவிப்பு திரும்ப செலுத்தாத கடன் விபரங்கள் அளிக்கும் நடைமுறை ஒத்தி வைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2017
05:57

புதுடில்லி : பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லிட்­டுள்ள நிறு­வ­னங்­கள், வங்­கி­களுக்கு திரும்­பச் செலுத்த தவ­றிய கடன் விப­ரங்­களை அளிக்­கும் நடை­மு­றையை, மறு அறி­விப்பு வரும் வரை, ஒத்தி வைத்­துள்­ள­தாக, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு ஆணை­ய­மான, ‘செபி’ தெரி­வித்து உள்­ளது.கடந்த மாதம், ‘செபி’ அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டது. அதில், ‘பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் உள்ள நிறு­வ­னங்­கள், வங்­கி­கள் மற்­றும் நிதி நிறு­வ­னங்­களில், கடன் பெற்று திரும்ப அளிக்­காத பட்­சத்­தில், அது குறித்த விப­ரங்­களை, திரும்­பச் செலுத்த தவ­றிய, 24 மணி நேரத்­திற்­குள், பங்­குச் சந்­தை­க­ளுக்கு தெரி­விக்க வேண்­டும்’ என, தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.இந்த நடை­முறை, அக்., 1 முதல், அம­லுக்கு வரும் என­வும் அறி­விக்­கப்­பட்டு இருந்­தது.வாராக்கடன்இந்­நி­லை­யில் நேற்று, ‘செபி’ வெளி­யிட்­டுள்ள அறிக்கை:பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் உள்ள நிறு­வ­னங்­கள், கடனை திரும்­பச் செலுத்த தவ­றிய விப­ரங்­களை அளிக்­கும் நடை­முறை, அக்., 1 முதல், அம­லுக்கு வர இருந்­தது.இந்­நி­லை­யில், இந்த திட்ட அம­லாக்­கத்தை நிறுத்தி வைக்க, முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது. மறு அறி­விப்பு வரும் வரை, இத்­திட்­டம் ஒத்தி வைக்­கப்­ப­டு­கிறது.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.வங்­கி­க­ளின் வாராக்­க­டன், 8 லட்­சம் கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளதை அடுத்து, அதை கட்­டுக்­குள் கொண்டு வர, ரிசர்வ் வங்­கி­யும், மத்­திய அர­சும் பல்­வேறு முயற்­சி­கள் மேற்­கொண்டு உள்­ளன.இந்­நி­லை­யில், பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லிட்­டுள்ள, நிறு­வ­னங்­க­ளின் வாராக்­க­டன் விப­ரங்­களை, பங்கு முத­லீட்­டா­ளர்­களும், அவ்­வப்­போது அறிந்து கொள்ள வேண்­டும் என, ‘செபி’ முடிவு செய்­துள்­ளது.இதன் தொடர்ச்­சி­யாக தான், பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லிட்­டுள்ள, அனைத்து நிறு­வ­னங்­களும், திரும்ப செலுத்­தாத கடன் விப­ரங்­களை அளிக்­கும் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்த முடி­வெ­டுத்து உள்­ளது.தாமதம்தற்­போது, பங்­குச் சந்தை பட்­டி­ய­லில், ஒரு நிறு­வ­னம் இடம் பெற வேண்­டு­மென்­றால், கடன் பத்­தி­ரங்­கள் மீதான வட்டி அல்­லது அசலை திரும்­பத் தரு­வ­தில் ஏற்­பட்­டுள்ள தாம­தம் குறித்த தக­வலை தெரி­விக்க வேண்­டும்.எனி­னும், வங்­கி­கள் மற்­றும் நிதி நிறு­வ­னங்­க­ளி­டம் பெற்­று உள்ள கடன், திரும்­பத் தராத கடன் போன்ற விப­ரங்­கள் கோரப்­ப­டு­வ­தில்லை.தற்­போது, இந்த விப­ரங்­க­ளை­யும், அதற்­கென உள்ள படி­வத்­தில் தாக்­கல் செய்­வதை கட்­டா­ய­மாக்க, ‘செபி’ திட்­ட­மிட்டு உள்­ளது.ஜூலை­யில், பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் உள்ள வங்­கி­க­ளுக்கு, ‘செபி’ அறிக்கை ஒன்றை அனுப்பி இருந்­தது.அதில், ‘ரிசர்வ் வங்கி மதிப்­பீடு செய்த வாராக்­க­டன், வங்­கி­யின் நிதி­நிலை அறிக்­கை­யில், 15 சத­வீ­தத்­திற்கு மேல் இருந்­தால், அது குறித்த விப­ரங்­களை தெரி­விக்க வேண்­டும்’ என, கோரப்­பட்­டி­ருந்­தது.இதன் மூலம், ஒரு வங்­கி­யின் ஆண்டு நிதி­நிலை அறிக்கை வெளி­யா­கும் போதே, வாராக்­க­டன் குறித்­தும் அறிந்து, அதற்­கேற்ற நட­வ­டிக்­கையை, ரிசர்வ் வங்கி எடுக்க முடி­யும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் அக்டோபர் 01,2017
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)