பங்கு சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் அறிவிப்பு திரும்ப செலுத்தாத கடன் விபரங்கள் அளிக்கும் நடைமுறை ஒத்தி வைப்புபங்கு சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் அறிவிப்பு திரும்ப செலுத்தாத கடன் ... ... அன்னிய நிதி நிறுவனங்கள் ஒரே மாதத்தில் அதிக விற்பனை அன்னிய நிதி நிறுவனங்கள் ஒரே மாதத்தில் அதிக விற்பனை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
நம்­பிக்கை வளர்ப்­பது ஒரு கலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2017
01:07

சந்தை, தொடர்ந்து சரிவை சந்­தித்து வரு­கிறது. இந்­தச் சூழ­லில், பலர் அடுத்து என்ன செய்­வது என, தெரி­யா­மல் தவிப்­பது தெரி­கிறது. உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள் மன­தில், சந்தை சார்ந்த நம்­பிக்கை, திடீர் சரிவை கண்­டி­ருக்­கிறது.
இது, பல­ரும் எதிர்­பா­ராத நேரத்­தில் நடந்­தேறி உள்­ளது. சந்­தை­யின் போக்­கில், உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள் காட்­டிய அப­ரி­மி­த­மான நம்­பிக்கை, ஏன் திடீ­ரென ஒரே வாரத்­தில் தலை­கீ­ழாக மாறி­யது என்ற திகைப்­பில் பல­ரும் ஆழ்ந்­துள்­ள­னர். இதற்­கான அடிப்­ப­டைக் கார­ணத்தை புரிந்து கொள்­வது அவ­சி­யம். சந்­தை­யில் முத­லீட்­டா­ளர்­களின் நம்­பிக்கை வளர்­வ­தும், வீழ்­வ­தும் தொடர் நிகழ்­வு­கள். ஒவ்­வொரு காளைச் சந்­தை­யும், இந்த இரு நிலை­களை காணா­மல் இல்லை. ஆனால், அடிப்­ப­டை­யில், இந்­திய முத­லீட்­டா­ளர்­கள் தங்­கள் நம்­பிக்­கையை ஆழ­மாக கற்­றுக் கொள்­ள­வில்லை என்­பதே நிதர்­ச­னம்.
பீதியில் முடிவு:
அடிப்­ப­டை­யில், ஒரு முத­லீட்­டின் மேல் ஒரு­வர் கொள்­ளும் நம்­பிக்கை, அந்த முத­லீட்­டின் அடிப்­படை தன்மை சார்ந்­தும், அதன் வருங்­கால வளர்ச்சி மற்­றும்எதிர்­பார்ப்பு சார்ந்­தும் அமைய வேண்­டும்.எப்­போ­துமே, நாம் ஒரு முத­லீட்­டின் மீது அள­வி­டும் எதிர்­பார்ப்­பு­கள் அடிப்­ப­டை­யில் யதார்த்­த­மா­க­வும், நிறை­வே­றும் தன்மை கொண்­டும் இருக்க வேண்­டும். நாம் முத­லீடு செய்ய விரும்­பும் நிறு­வ­னங்­களின் மதிப்­பீடு, இந்த இரண்டு அடிப்­ப­டை­கள் சார்ந்து அமைய வேண்­டும்.
அப்­படி இருந்­தால், நாம் வாங்­கும் எந்த பங்­கிற்­கும், அதிக விலை கொடுத்து வாங்க வேண்­டி­ய­தி­ருக்­காது. அடிப்­ப­டை­யில், நாம் பங்­கு­களை வாங்­கும் முறை, மதிப்­பீடு சார்ந்து மட்­டுமே இருக்­கும். பங்­கு­களை வாங்­கு­வ­தற்கு நாம் கையா­ளும் வழி­முறை கட்­டுக்­கோப்­பா­க­வும், சீரா­க­வும் அமை­யும்.ஆனால், காளைச் சந்­தை­யில், பெரும்­பா­லா­னோர் இந்த கட்­டுக்­கோப்பை துாக்கி எறி­கின்­ற­னர். அவ­ச­ரம் அவர்­களை சிறை­ பி­டித்து நகர்த்த துவங்­கு­கிறது. இரண்டு வித­மான தவ­று­களை அவர்­கள் செய்­கின்­ற­னர்.
ஒன்று, மதிப்­பீட்டை புறந்­தள்ளி, முத­லீட்டு முடி­வு­களை எடுப்­பது. இன்­னொன்று, எங்கே முடி­வு எடுக்க தாம­தித்­தால், முத­லீடு செய்­யும் வாய்ப்பே நழு­வி­ வி­டுமோ என்ற பீதி­யில் முடி­வெ­டுப்­பது.
மதிப்­பு­சார் ஆய்வு:
இந்த இரண்டு தவ­று­க­ளை­யும், நம் உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள் சில மாதங்­க­ளாக தொடர்ந்து செய்து வந்­த­னர். சந்­தை­யில், பங்­கு­களை வாங்­கு­வோர் மிக அதி­க­மா­க­வும், விற்­போர் மிக குறை­வா­க­வும் இருக்க, சந்தை அப­ரி­மி­த­மான வளர்ச்சி கண்­டது. இது, சந்­தை­யில் பங்கு வாங்­கு­வோர் மத்­தி­யில், வாங்­கும் பீதியை ஏற்­ப­டுத்­தி­யது. பங்­கு­கள் மேலும் மதிப்பு கூடின.ஒரு கால­கட்­டத்­தில், பல பங்­கு­களின் மதிப்பு அவற்­றின் எதிர்­கால லாபத்தை விட பன்­ம­டங்கு கூடி விற்­றன.ஆனா­லும், பங்கு வாங்­கு­வோர்,மதிப்­பீட்டை பற்­றிய எந்த கவ­லை­யும் இன்றி வாங்­கிக் குவித்­த­னர்.
இப்­படி வாங்­கிக் குவிப்­ப­தில் காட்­டிய அவ­ச­ரம் தான், இன்­றைய பீதிக்கு மூலக் கார­ணம்.பொரு­ளா­தா­ரம் சார்ந்து எழுந்த சமீ­ப­ கால கவ­லை­யும், ஐய­மும், முத­லீட்­டா­ளர்­கள் காட்­டிய நம்­பிக்­கையை, ஒரே வாரத்­தில் நிலை­கு­லை­யச் செய்­து­விட்­டன. பங்­கு­களின் மீது நம்­பிக்கை வளர்ப்­பது ஒரு கலை. அதை நிதா­னம் கொண்டு வளர்ப்­ப­வர்­கள் நம்­பிக்­கையை எளி­தில் இழப்­ப­தில்லை. நம்­பிக்­கையை நாம் உரு­வாக்­கும் வித­மும், அதை வளர்க்­கும் செயல்­மு­றை­யும், அதன் நிலை­கு­லை­யா­மை­யை­யும், ஆயு­ளை­யும் நிர்­ணை­யிக்­கும்.
இதைக் கற்­றுக்­கொள்ள சந்தை மந்­த­மாக இருக்­கும் நேரங்­கள் பெரி­தும் உத­வு­கின்றன. சந்தை காணக் கூடிய தொய்வு நிலையை, ஒவ்­வொரு முத­லீட்­டா­ள­ரும் தங்­கள் மேம்­பாட்­டிற்கு பயன்­ப­டுத்த வேண்­டும். கையி­ருப்பு முத­லீ­டு­களை, மதிப்­பு­சார் ஆய்வு செய்து கொண்டு, அவற்­றில் தவ­றான தேர்­வு­களை களைய வேண்­டும்.புதிய முத­லீ­டு­களை மதிப்பு சார்ந்து கவ­ன­மா­கத் தேர்வு செய்து, வருங்­கால பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் நாமும் பங்­கேற்று பயன் அடை­ய­லாம்.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி : காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை ... மேலும்
business news
அரசாங்கங்களும், தனியார் துறைகளும் பரஸ்பர நம்பிக்கையுடன் இணைந்து செயல்படுவதைத் தவிர, வேறு வழியில்லை என்பதையே, ... மேலும்
business news
புதுடில்லி : மோட்டார் வாகன காப்பீட்டு நிறுவனங்கள், இலவசமாக வாகனத்தை எடுத்துச் செல்வது, கொண்டு விடுவது போன்ற ... மேலும்
business news
புதுடில்லி : ஐ.டி.பி.ஐ., வங்கி, அதன் காப்பீட்டு கூட்டு நிறுவனத்தின் பங்குகளை முற்றிலும் விற்றுவிட்டு, வெளியேற ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய தொலைதொடர்பு ஆணையமான ‘டிராய்’ போனில் ஒருவர் அழைக்கும்போது, வாடிக்கையாளர் குறித்த தகவலை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)