பதிவு செய்த நாள்
06 அக்2017
10:30

புதுடில்லி : ஜிஎஸ்டி கவுன்சிலின் 22வது ஆலோசனை கூட்டம் டில்லியில் இன்று (அக்.,6) நடக்கிறது. இதில் அனைத்து மாநில நிதியமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் மோடி, அருண் ஜெட்லி, பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் நேற்று (அக்.,5) 3 மணிநேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். இதில் ஆலோசிக்கப்பட்ட விபரங்கள் இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்திற்கு பின், 28 சதவீதம் வரி கொண்ட பல பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஏறக்குறைய 60 பொருட்கள் 28 சதவீதம் வரிவிதிப்பில் இருந்து, 18 முதல் 12 சதவீதம் வரிவிதிப்பு பிரிவிற்கு மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒப்புதலுக்கு பிறகு இத தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விலைகுறைப்பு அறிவிப்புக்கள் வெளியிடப்படும் பட்சத்தில், தீபாவளி சமயத்தில் நடுத்தர மக்களுக்கு அது பெரிய உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|