பதிவு செய்த நாள்
06 அக்2017
15:40

புதுடில்லி : இந்தியாவில் மொபைல் இன்டர்நெட் டவுன்லோடு வேகங்கள் வழங்கும் நிறுவனங்கள் சார்ந்த ஆய்வு அறிக்கையை ஓபன்சிக்னல் எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் பாரதி ஏர்டெல் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. டவுன்லோடு வேகங்களை பொருத்த வரை சராசரியாக நொடிக்கு 9.15 எம்.பி. வேகத்தில் ஏர்டெல் டவுன்லோடு வேகம் இருந்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ டவுன்லோடு வேகம் நொடிக்கு 5.81 எம்.பி.யாகவும், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் முறையே 7.45 எம்பி மற்றும் 7.4 எம்.பி. என்ற அளவில் டேட்டா வேகம் வழங்கியுள்ளன. இந்த ஆய்வு அறிக்கை முடிவுகளானது ஜூன் மற்றும் ஆகஸ்டு மாதங்களில் சுமார் ஏழு லட்சம் வாடிக்கையாளர்களின் தகவல்களை கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.
3ஜி டேட்டா வேகங்கள் வழங்கிய நிறுவனங்களின் பட்டியலிலும் நொடிக்கு 3.62 எம்.பி. என்ற வேகத்தில் ஏர்டெல் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் முறையே 3.12 எம்.பி. மற்றும் 2.6 எம்.பி. வரை வழங்கியுள்ளன. ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வந்த இலவச சேவைகள் மார்ச் மாதத்துடன் நிறைவுற்றதைத் தொடர்ந்து ஜியோ எல்டிஇ வேகங்கள் கடந்த ஆறு மாதங்களில் மேம்பட்டிருக்கிறது.
அந்தவகையில் ஜியோ 4ஜி டவுன்லோடு வேகங்கள் சராசரியாக 3.9 எம்.பி மற்றும் 58.8 எம்பியாக இருக்கிறது. இது முன்னதாக ஜியோ வழங்கியதை விட 49 சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே காலக்கட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் 11.5 எம்.பி. மற்றும் 9.1 எம்.பி. வரை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் விரிவான எல்டிஇ வசதிகள் வழங்கியதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ வேகம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. ஏர்டெல் ஒட்டுமொத்த வேகம் ஏப்ரல் மாதத்தில் 5.05 எம்.பி.யாக இருந்ததாக ஓபன்சிக்னல் தெரிவித்தது. மேலும் நாடு முழுவதும் 95.6 சதவிகிதம் அளவு ரிலையன்ஸ் ஜியோ சிறப்பான எல்டிஇ சேவையை வழங்குகிறது. ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் 57.2 சதவிகிதம் அளவு மட்டுமே 4ஜி சிக்னல் பெற முடிகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|