தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு ... புதிதாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட 27 பொருட்களின் முழுவிபரம் புதிதாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட 27 பொருட்களின் முழுவிபரம் ...
ஒரு ரூபாய் கூட ஜிஎஸ்டி செலுத்தாத 22 லட்சம் நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2017
14:44

புதுடில்லி : ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரிடமும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஜூலை மாதம் ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு ரூ.94,000 கோடி வரை வரிவசூல் நடந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின்படி, ஏறக்குறைய 22 லட்சம் நிறுவனங்கள் இதுவரை ஒரு ரூபாய் கூட ஜிஎஸ்டி செலுத்தவில்லை. இவர்கள் குறைந்தபட்சமாக 1-30,000 ரூபாயும், அதிகபட்சமாக ரூ.1 கோடி வரையும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். கிட்டதட்ட 70 சதவீதம் அல்லது 32 லட்சம் தொழில்கள் இதுவரை வரி ஏதும் செலுத்தவில்லை. தற்போது வரை சுமார் ஒரு கோடி தொழில்கள் மற்றும் சேவை அமைப்புக்கள் ஜிஎஸ்டிஎன்.,ன் கீழ் பதிவு செய்து கொண்டுள்ளன என தெரிய வந்துள்ளது.

நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஆண்டுக்கு ரூ.1.5 கோடி வரை வருமானம் பெறுவோரிடம் இருந்து 94 முதல் 95 சதவீதம் வரி வசூலாகி இருப்பதாகவும், வரி வசூல் அதிகரிக்கும் போது வரி விகிதம் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஆனால் 54 லட்சம் தொழில்கள் இதுவரை எந்த வரி விலக்கும் பெறாமல், வரி செலுத்தாமலும் இருந்து வருவதாக அரசு புள்ளி விபரம் வெளியிட்டுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை ... மேலும்
business news
அரசாங்கங்களும், தனியார் துறைகளும் பரஸ்பர நம்பிக்கையுடன் இணைந்து செயல்படுவதைத் தவிர, வேறு வழியில்லை என்பதையே, ... மேலும்
business news
புதுடில்லி : மோட்டார் வாகன காப்பீட்டு நிறுவனங்கள், இலவசமாக வாகனத்தை எடுத்துச் செல்வது, கொண்டு விடுவது போன்ற ... மேலும்
business news
புதுடில்லி : ஐ.டி.பி.ஐ., வங்கி, அதன் காப்பீட்டு கூட்டு நிறுவனத்தின் பங்குகளை முற்றிலும் விற்றுவிட்டு, வெளியேற ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய தொலைதொடர்பு ஆணையமான ‘டிராய்’ போனில் ஒருவர் அழைக்கும்போது, வாடிக்கையாளர் குறித்த தகவலை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)