ஒரு ரூபாய் கூட ஜிஎஸ்டி செலுத்தாத 22 லட்சம் நிறுவனங்கள்ஒரு ரூபாய் கூட ஜிஎஸ்டி செலுத்தாத 22 லட்சம் நிறுவனங்கள் ... மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை ...
புதிதாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட 27 பொருட்களின் முழுவிபரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2017
15:48

புதுடில்லி : டில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 22 வது ஆலோசனைக் கூட்டம் நேற்று (அக்.,6) நடந்தது. இதில் சிறு தொழில்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் சுமையை குறைப்பதற்காக 27 பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்பட்டது.

புதிதாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட 27 பொருட்களில் அதிகளானவை அன்றாடம் பயன்படுத்தக் கூடியவை. புதிதாக வெளியிடப்பட்ட அறிவிப்பால் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி குறைகிறது என்பது முழுவிபரம் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அவற்றின் விபரம் :
1. உலறவைக்கப்பட்ட மாம்பழ துண்டுகள் (ஜிஎஸ்டி 12% லிருந்து 5 % ஆகிறது)
2. காக்ரா மற்றும் சப்பாத்தி அல்லது ரொட்டி (ஜிஎஸ்டி 12% லிருந்து 5 % ஆகிறது)
3. சமைக்கப்பட்ட உணவுகள் டப்பாவில் அடைக்கப்பட்டு, மத்திய அரசு அல்லத ஏதாவது மாநில அரசின் ஒப்புதல் பெறப்பட்டது என குறிக்கப்பட்டு, சமூக நலத்திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக வலிவடைந்த மக்களுக்கு வழங்கப்படுவது (ஜிஎஸ்டி 18% லிருந்து 5 % ஆகிறது)
4. பிராண்ட் பெயர்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட அல்லது கோர்ட்டால் தடை செய்யப்பட்டது அல்லாத தின்பண்டங்கள் (ஜிஎஸ்டி 12% லிருந்து 5 % ஆகிறது)

5. லினியர் ஆல்கைல் பென்சைன் தயாரிக்க பயன்படுத்தப்படும் உயர்தர மண்ணெண்ணை (ஜிஎஸ்டி 18% லிருந்து 18 % ஆகிறது. இதற்கு பின்னர் விளக்கம் அளிக்கப்படும்)

6. பிராண்ட் பெயர்கள் பயன்படுத்தப்படாத ஆயுர்வேத, யுனானி, சித்தா, ஹோமியோபதி மருந்துகள் (ஜிஎஸ்டி 12% லிருந்து 5 % ஆகிறது)

7. போஸ்டர் கலர் (ஜிஎஸ்டி 28 % லிருந்து 18 % ஆகிறது)

8. குழந்தைகளின் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்படும் நவீன ஒட்டும் பொருட்கள் (ஜிஎஸ்டி 28 % லிருந்து 18 % ஆகிறது)

9. பிளாஸ்டிக் கழிவுகள், உலோகக் கழிவுகள் (ஜிஎஸ்டி 18 % லிருந்து 5 % ஆகிறது)
10. ரப்பர் கழிவுகள், தாது கழிவுகள் (ஜிஎஸ்டி 18 % லிருந்து 5 % ஆகிறது)
11. டயர்கள் அல்லது கடின ரப்பர் கழிவுகள் (ஜிஎஸ்டி 28 % லிருந்து 5 % ஆகிறது)
12. காகித கழிவுகள் (ஜிஎஸ்டி 12 % லிருந்து 5 % ஆகிறது)
13. பணிக்காக வழங்கப்படும் தொகை (ஜிஎஸ்டி 5 % ஆகிறது)
14. சில்லறை விற்பனைக்கு அல்லாத கைத்தறி நூல்கள் (ஜிஎஸ்டி 18% லிருந்து 12 % ஆகிறது)
15. நைலான், பாலியஸ்டர் உள்ளிட்ட அனைத்து சின்தடிக் ரக நூல்கள் (ஜிஎஸ்டி 18% லிருந்து 12 % ஆகிறது)
16. விஸ்கோசின் ரேயான் உள்ளிட்ட அனைத்து ரக செயற்கை நூல்கள் (ஜிஎஸ்டி 18% லிருந்து 12 % ஆகிறது)
17. கைத்தறி ஆடைகளுக்கு பயன்படுத்தப்படும் நூல்கள் (ஜிஎஸ்டி 18% லிருந்து 12 % ஆகிறது)

18. கைத்தறி ஆடைகளுக்கான பிரதான நூல்கள்(ஜிஎஸ்டி 18% லிருந்து 12 % ஆகிறது)

19. உண்மையான ஜரிகைகள் (ஜிஎஸ்டி 12% லிருந்து 5 % ஆகிறது)
20. மார்பிள், கிரானைட் அல்லாத, 6802 பிரிவின் கீழ் வரும் கட்டுமான பொருட்கள் (ஜிஎஸ்டி 28% லிருந்து 18 % ஆகிறது)
21. கண்ணாடி கழிவுகள் (ஜிஎஸ்டி 18% லிருந்து 5 % ஆகிறது)
22. அலுவலக உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் பேப்பர் கிளிப்கள், லெட்டர் கிப்கள், பைல்கள் உள்ளிட்ட அடிப்படை உலோகங்கள் (ஜிஎஸ்டி 28% லிருந்து 18 % ஆகிறது)
23. 8483 ரக எளிய ரக பொருத்தும் தாங்கிகள் (ஜிஎஸ்டி 28% லிருந்து 18 % ஆகிறது)
24. 15 எச்பி.,க்கு மிகாமல் இருக்கும் திறன் கொண்ட டீசல் இன்ஜின்களை பொருத்தும் திருகுகள் (ஜிஎஸ்டி 28% லிருந்து 18 % ஆகிறது)
25. தண்ணீர் பம்புகள், ஆழ்துளை குழாய்கள் உள்ளிட்டவைகள் பொருதஅதுவதற்கான குழாய்கள் (ஜிஎஸ்டி 28% லிருந்து 18 % ஆகிறது)
26. இ கழிவுகள் (ஜிஎஸ்டி 28%, 18% லிருந்து 5 % ஆகிறது)
27. மரக்கரி துண்டுகள் (ஜிஎஸ்டி 18% லிருந்து 5 % ஆகிறது)

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)