பதிவு செய்த நாள்
08 அக்2017
04:27
நாட்டில், கார் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள, ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், சமீபத்தில், தன், ‘வெர்னா’ செடான் காரின், ‘நெக்ஸ் ஜென் வெர்னா’வை அறிமுகம் செய்துள்ளது. 21 கூடுதல் அம்சங்களுடன் வந்துள்ள இந்த காருக்கு, வாடிக்கையாளர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதன், பெட்ரோல் வேரியன்ட் கார்களின், ஷோரூம் துவக்க விலை, 7.99 லட்சம் ரூபாய் – 12.24 லட்சம் ரூபாய்; டீசல் வேரியன்ட்களின் துவக்க விலை, 9.19 லட்சம் ரூபாய் – 12.40 லட்சம் ரூபாய்.அறிமுகமான, 40 நாட்களிலேயே, 15 ஆயிரம் பேர், ‘நெக்ஸ் ஜென், வெர்னா’வை முன்பதிவு செய்துள்ளனர். இது குறித்து, ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவன, மேலாண் இயக்குனர், ஒய்.கே.கூ கூறுகையில், ‘‘தீபாவளிக்கு முன், 12 ஆயிரம் கார்கள், ‘டெலிவரி’ செய்யப்படும். இந்த ஆண்டுக்குள், 20 ஆயிரம் கார்கள் சந்தைக்கு வரும். இதற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு, மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது,’’ என, தெரிவித்து உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|