பதிவு செய்த நாள்
08 அக்2017
04:28
கோவாவில் ஆண்டுதோறும், ஐ.பி.டபிள்யு., எனப்படும், இந்திய பைக் திருவிழா விமரிசையாக நடக்கிறது. ஆசியாவின், மிகப்பெரிய பைக் திருவிழாவான இது, இந்த ஆண்டு, நவ., 24, 25ல் நடக்கிறது. இதில் பங்கேற்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, ‘பைக்’ பிரியர்கள் பதிவு செய்துள்ளனர். உலகின், பிரபல பைக்கர்களுடன் கலந்துரையாடல், சாகச பயிற்சி என, இவ்விழா களை கட்டும். விருப்பமுடையோர், indiabikeweek.in என்ற இணையதளத்தில், பதிவு செய்யலாம். ஒரு ரூபாய் நாணயம் இருக்கா?கார்கள், விபத்துகளில் சிக்குவதற்கு, டயர்கள் முக்கிய காரணமாக உள்ளன. அதுவும், மழைக் காலத்தில், டயர்களால் நிகழும் விபத்துகள் அதிகம். சாலை வழுக்கலாக இருந்தாலும், கார், டயர்கள் பிடிமானம் இல்லாமல் விபத்தில் சிக்குகிறது. டயர்களில், சரியான காற்றழுத்த அளவு பராமரிப்பது ஒரு புறம். கார் டயரின் மேல்பாகத்தில், ‘டிரெட்’ எனப்படும், சற்று ஆழமான கோடு காணப்படும். அது, டயரின் வாழ்நாளை காட்டும்.அந்த கோட்டில், ஒரு ரூபாய் நாணயத்தை, செங்குத்தாக நிறுத்தினால், அது, ஓரளவுக்கு அதில் புதையும். பின், இதர டயர்களிலும், ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து பார்க்க வேண்டும். அவற்றில், எதில், ஆழம் குறைவாக உள்ளதோ, அதை, உடனடியாக கவனிக்க வேண்டியது அவசியம். ‘வீல் அலைன்மென்ட்’ செய்வதா அல்லது டயரை மாற்றுவதா என்பதை, ‘சர்வீஸ்’ செய்பவர் முடிவு செய்வார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|