பதிவு செய்த நாள்
08 அக்2017
04:29

க்ஸ்வேகன் குழுமத்தைச் சேர்ந்த, ‘ஸ்கோடா’ நிறுவனம், கோடியாக், எஸ்.யு.வி., வாகனத்தை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.அலாஸ்காவில் வாழும், பனிக்கரடியின் பெயரை தாங்கி வந்துள்ள இந்த புதிய காரில், 150 எச்.பி., திறனுடைய, 1968 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. கோடியாக்கில், ஏழு இருக்கைகள் உள்ளன. பின்புறத்தில், 270 லி., கொள்ளளவு உடைய, பொருட்களை வைக்கும், ‘பூட்’ உள்ளது. மூன்றாவது வரிசையை மடக்கினால், அதன் அளவு, 630 லிட்டராக அதிகரிக்கும். மேலும், இரண்டாவது வரிசையை, மேலும் மடக்கும் போது, ‘பூட்’ கொள்ளளவு, 2,005 லிட்டராக உயரும்.இதில், ‘ஆப்பிள் கார் பிளே; ஆண்ட்ராய்டு ஆட்டோ’ மற்றும், ‘12 – ஸ்பீக்கர் கான்டன் ஸ்டீரியோ’ ஆகியவை அடங்கிய, எட்டு அங்குல அகல, இன்போடெயின்மென்ட், தொடுதிரை உள்ளது. இதில், பட்டனை அழுத்தினால், ‘அட்ஜஸ்ட்’ ஆகும், எலக்ட்ரிக்கல் சீட்; கதவு திறக்கும் போது, அது இடிபடாமல் காக்கும் வகையில், வெளியே வரும், பிளாஸ்டிக் பம்பர்; ‘ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்ஸ்’ என, பல அம்சங்கள் உண்டு. இதன், ஷோரூம் துவக்க விலை,34.49 லட்சம் ரூபாய்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|