வரி குறைப்பு – கணக்கு தாக்கல் ஜி.எஸ்.டி., விதிமுறைகள் தளர்வு சிறு, நடுத்தர நிறுவனங்கள் வரவேற்புவரி குறைப்பு – கணக்கு தாக்கல் ஜி.எஸ்.டி., விதிமுறைகள் தளர்வு சிறு, நடுத்தர ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.65.32 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.65.32 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கமாடிட்டி சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2017
00:00

கச்சா எண்ணெய்
கச்சா எண்­ணெய் விலை, கடந்த வாரம் சரி­வில் முடி­வ­டைந்­தது. துவக்­கத்­தில் ஏற்­றம் காணப்­ப­டி­னும், வார இறுதி நாட்­களில், விலை வீழ்ச்­சி­ய­டைந்­தது. ஒரு பேரல், 51.69 டால­ரில் இருந்து, 49.10 டாலர் என்ற அள­வுக்கு சரிந்­தது. 16 மாதங்­க­ளுக்­குப் பின் ஏற்­பட்ட தொடர் உயர்­வுக்­குப் பின், வியா­பா­ரி­கள் லாபம் ஈட்­டு­தல் கார­ண­மா­க­வும், சந்­தை­யில் எண்­ணெய் சப்ளை உய­ரும் என்ற கருத்­துக்­க­ளா­லும், விலை குறைய ஆரம்­பித்­தது.

இந்த ஆண்­டில், இது­வரை உள்ள உச்ச விலை, 55.22 டாலர் ஆகும். இந்த உயர்வு, ஜன­வரி மாதம் ஏற்­பட்­ட­தா­கும். ஒபெக் கூட்­ட­மைப்­பில் உள்ள, மிகப் பெரிய எண்­ணெய் உற்­பத்தி நாடான, சவுதி அரே­பியா மற்­றும் ரஷ்யா ஆகிய நாடு­கள் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், அடுத்த ஆண்­டில் உற்­பத்­தியை குறைக்­கப் போவ­தாக தெரி­விக்­கப்­பட்­டது. இத­னால் சந்­தை­யில் விலை குறைவு கட்­டுக்­குள் கொண்­டு­ வ­ரப்­பட்­டது.
இந்த கூட்­ட­மைப்­பில் உள்ள பல சிறிய நாடு­கள், உற்­பத்தி குறைப்பு ஒப்­பந்­தத்­தில் கையொப்­பம் இட்­டுள்­ள­னர். இத­னால் அவர்­க­ளது நாட்­டில் பொரு­ளா­தார வளர்ச்சி பாதிக்­கப்­பட்­டுள்­ளது. அர­சு­களின் வரு­மா­னம் குறைந்­துள்­ளது. இந்­நி­லை­யில், அந்த நாடு­கள் மீண்­டும் ஒப்­பந்­தப்­படி எண்­ணெய் உற்­பத்தி குறைப்பை மேற்­கொள்­ளுமா என்­பது கேள்­விக்­கு­றி­யாகி உள்­ளது.உல­கின் எண்­ணெய் இறக்­கு­ம­தி­யில், இரண்­டா­வது பெரிய நாடான, இந்­தியா, தற்­போது அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து 1.5 மில்­லி­யன் பேரல் கச்சா எண்­ணெயை இறக்­கு­மதி செய்­தது. இது வளை­குடா நாடு­க­ளுக்கு சவா­லாக அமைந்­தது.

கார­ணம், ஆசிய சந்­தை­யில் வளை­குடா நாடு­களில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­ப­டும்­போது சந்தை விலை­யு­டன் பிரீ­மி­யம் தொகை­யும் சேர்த்து கொடுக்க வேண்­டி­ய­தி­ருந்­தது.பெருகி வரும் அமெ­ரிக்க ஏற்­று­ம­தி­யும் வளை­குடா நாடு­க­ளுக்கு சவ­ாலாக உள்­ளது என்­ப­தில் எந்த சந்­தே­க­மும் இல்லை. அதே­ச­ம­யம், அமெ­ரிக்கா – வட கொரியா நாடு­க­ளுக்கு இடை­யே­யான அசா­தா­ரண சூழ­லும், இன்­னும் நீடித்து வரு­கிறது.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 3,188 3,105 3,265 3,340என்.ஒய்.எம்.இ.எக்ஸ்., (டாலர்) 48.90 48.00 49.70 50.90

தங்கம், வெள்ளி
தங்­கம் மற்­றும் வெள்ளி, தொடர்ந்து ஒரு மாத­மாக விலை சரிந்து வியா­பா­ர­மா­கிறது. செப்­டம்­பர் முதல் வாரத்­தில், ஒரு அவுன்ஸ் தங்­கம், 1,357 டாலர் என்ற நிலை­யில் இருந்து தற்­போது, 1,260 டாலர் என்ற அள­வுக்கு குறைந்­தது. 100 டாலர் அள­வுக்கு விலை குறைந்­து­விட்­டது.

தொடர் உயர்­வுக்­குப் பின், வியா­பா­ரி­கள் லாபம் ஈட்­டு­தல் கார­ண­மா­க­வும் இந்த விலை சரிவு நிகழ்ந்­தது. மேலும், அமெ­ரிக்க நாணய குறி­யீ­டான, டாலர் இன்­டெக்ஸ், அமெ­ரிக்க பொரு­ளா­தார உயர்வு கார­ண­மாக, பல மாத சரி­வுக்­குப் பின், சிறி­த­ளவு உயர்ந்­த­தும், தங்­கம் வெள்ளி விலை குறைய ஆரம்­பித்­தது. பொது­வா­கவே, டால­ரும் தங்­க­மும் எதிர்­ம­றை­யான போக்கை கடை­ப்பி­டிப்­பவை ஆகும்.

கடந்த வெள்­ளி­யன்று வெளி­வந்த செய்­தி­யில், ரஷ்யா தன் அறிக்­கை­யில் வட கொரியா நாடு மீண்­டும் ஒரு ஏவு­கணை சோதனை செய்ய தயா­ராகி வரு­வ­தாக தக­வல் வெளி­யிட்­டது.இந்த ஏவு­கணை தொலை­துா­ரம் சென்று தாக்க கூடிய வகை­யி­லா­ன­தா­கும். இந்த நிகழ்­வுக்கு பின், தங்­கம் விலை அச்­சம் கார­ண­மாக சிறி­த­ளவு உயர்ந்­தது. உடன் வெள்ளி விலை­யி­லும் முன்­னேற்­றம் காணப்­பட்­டது. வரும் நாட்­களில், ஏதே­னும் ஒரு அசா­தா­ரண சூழல் நில­வும்­பட்­சத்­தில், மீண்­டும் விலை உயர்வு நிகழ வாய்ப்­புள்­ளது.

மேலும், மாதம் ஒரு­முறை வரும், அமெ­ரிக்க பொரு­ளா­தார கார­ணி­யான என்.எப்.பி., எனப்­படும் புதி­தாக வேலை­யில் சேர்ந்­தோர் எண்­ணிக்கை, செப்­டம்­பர் மாதம் எதிர்­பார்த்­ததை விட குறை­வாக வெளி­வந்­த­தால், டாலர் இன்­டெக்ஸ் குறைந்து, தங்­கம் மற்­றும் வெள்ளி விலை அதி­க­ரிக்க ஆரம்­பித்­தது குறிப்­பி­டத்­தக்­கது.
தங்கம்:பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 29,270 29,150 29,410 29,660காம்எக்ஸ் (டாலர்) 1,260 1,252 1,269 1,280

வெள்ளி:பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 39,650 38,380 39,000 39,510காம்எக்ஸ் (டாலர்) 16.30 15.85 16.90 17.25

செம்பு
செம்பு விலை, கடந்த வாரத்­தில் ஏற்­றத்­தில் முடி­வ­டைந்­தது. இதற்கு முந்­தைய வாரங்­களின் சரி­வி­லி­ருந்து மீண்­டது. சர்­வ­தேச சந்­தை­யில், ஒரு பவுண்டு விலை, 2.92 டால­ரில் இருந்து, 3.05 டாலர் என்ற அளவை எட்­டி­யது.

உயர்ந்து வரும், அமெ­ரிக்க மற்­றும் ஐரோப்­பிய பங்­குச் சந்­தை­யின் போக்கு கார­ண­மாக, அந்­நா­டு­களின் பொரு­ளா­தார முன்­னேற்­றம் மற்­றும் எதிர்­கா­லத்­தில் செம்­பின் தேவை அதி­க­ரிக்­கும் என்ற எதிர்ப்­பார்ப்பு கார­ண­மாக விலை உயர்ந்து வரு­கிறது. பொரு­ளா­தார வளர்ச்­சி­யில், தொழிற்­சாலை உற்­பத்­தி­யா­னது பெரும்­பங்கு வகிக்­கிறது. இதனை சார்ந்து தொழிற்­சாலை மூலப்­பொ­ருட்­கள் விலை­களில் மாற்­றம் ஏற்­படும்.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 437.10 434.00 442.00 455.00

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)