வரி குறைப்பு – கணக்கு தாக்கல் ஜி.எஸ்.டி., விதிமுறைகள் தளர்வு சிறு, நடுத்தர நிறுவனங்கள் வரவேற்புவரி குறைப்பு – கணக்கு தாக்கல் ஜி.எஸ்.டி., விதிமுறைகள் தளர்வு சிறு, நடுத்தர ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.65.32 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.65.32 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய பங்கு பரி­வர்த்­தனை உச்­சத்­தில் இருப்­பது ஏன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2017
00:04

ஜி.எஸ்.டி., வரியை அம­லுக்கு கொண்­டு­ வ­ரு­வ­தில் ஏற்­பட்ட குழப்­பங்­கள், ஐயங்­கள் மற்­றும் அதி­ருப்­தியை, அரசு முன்­னெ­டுத்து, அதில் பல மாற்­றங்­களை கொண்டு வந்­தி­ருக்­கிறது.

வரி­கள் விதிப்­ப­தில் யாருக்­கும் மாற்று கருத்து இருக்க முடி­யாது. ஆனால், அவற்றை அம­லுக்கு கொண்டு வரு­வ­தி­லும், மக்­கள் மத்­தி­யில் அவை ஏற்­பு­டை­ய­தாக வர­வேற்பை பெறு­வ­தி­லும் அர­சின் ஆளுமை தெளி­வாக புரி­யும். அத்­த­கைய ஆளுமை, ஏனோ இந்­திய அர­சி­டம் முத­லில் தெரி­வ­தில்லை.

வரி வசூலிப்பு:
தவ­று­களை தொடர்ந்து செய்து, மக்­கள் தரும் பின்­னுாட்­டம் சார்ந்தே மாற்­றங்­கள் அமை­கின்றன. அதி­கார வர்க்­கம், தொடர்ந்து தன் முடி­வு­களை திரும்ப பெறு­வது என்­பது, மக்­கள் மத்­தி­யில் எப்­படி எடுத்­துக்­கொள்­ளப்­படும் என்­பதை பொறுத்­தி­ருந்­து­தான் பார்க்க வேண்­டும். இதை அர­சின் பல­வீ­ன­மாக மக்­கள் கரு­து­வர் என, ஜி.எஸ்.டி., வரி­யின் எதிர்ப்­பா­ளர்­கள் பிர­சா­ரம் செய்­தா­லும், பங்­குச் சந்­தை­யின் பார்வை மாறு­படும் என்றே தோன்­று­கிறது.

பங்­குச் சந்தை ஜி.எஸ்.டி.,சார்ந்து எடுக்­கும் கண்­ணோட்­ட­மா­னது, திட்­டம் சுமு­க­மாக அம­லுக்கு வரு­வ­தி­லும், வரி­கள் சீராக வசூ­லிக்­கப்­ப­டு­வ­தி­லும் மட்­டுமே உள்­ளது. திட்­டத்­தில் கொண்­டு­ வ­ரப்­படும் மாற்­றங்­களை, பங்­குச்சந்தை அதி­கம் கண்­டு­கொள்­ளாது. மாற்­றங்­கள் மக்­க­ளால் வர­வேற்­கப்­பட்­டாலே சந்­தை­யின் நம்­பிக்கை கூடும் என்றே தோன்­று­கிறது.

வரி செலுத்­து­வோ­ரில் 90 சத­வீ­தம், மூன்று மாதத்­திற்கு ஒரு­முறை, தங்­கள் வரி கணக்­கு­களை தாக்­கல் செய்­தால் போதும் என்ற அறி­விப்பு, ஜி.எஸ்.டி.என்., என்ற மேலாண்மை நிறு­வ­னம் சார்ந்த சிக்­கல்­களை தற்­போ­தைக்கு புறம்­தள்ளி, அது சீராக இயங்க வசதி செய்­கிறது.

சரிவை தவிர்க்கலாம்:
அடிப்­ப­டை­யில் வரி­யின் நுகர்­வோ­ரான, வரி செலுத்­து­வோர் மத்­தி­யில் ஏற்­பட்ட அதி­ருப்தி பெரி­தும் அடங்­கும் வகை­யில் மாற்­றங்­கள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ளன. இத­னால், அர­சுக்கு நிதி­இ­ழப்­பும் அதி­க­மில்லை. ஆகவே, ஜி.எஸ்.டி., நாள­டை­வில் சுமு­க­மாக அம­லுக்கு வரும் சூழல் ஏற்­பட்­டுள்­ள­தா­கவே சந்தை கரு­தும். இந்­திய சந்­தை­யில் தொடர்ந்து பங்­கு­களை விற்­பனை செய்­யும், எப்.ஐ.ஐ., முத­லீட்­டா­ளர்­கள் தங்­கள் நிலையை தொடர்­வர் என்றே தோன்­று­கிறது. அவர்­கள் விற்­கும் பங்­கு­களை தொடர்ந்து யாரா­வது வாங்­கி­னால்­ தான் சந்தை சரிவை தவிர்க்க முடி­யும்.

அடிப்­ப­டை­யில், இப்­போது நடக்­கும் சந்­தை­யின் அடுத்­த­கட்ட நகர்­விற்கு சில்­லரை முத­லீடே கார­ணம் என்­பது உறு­தி­யாக தெரி­கிறது. பரஸ்­பர நிதி நிறு­வ­னங்­கள், இந்­திய பங்­கு­களை வாங்­கிக் குவிப்­ப­து­ தான் இன்று சந்தை சரி­வ­டை­யா­மல் இருக்க முக்­கிய கார­ணம்.

வரவேற்பு:
ஆனால், இந்த நிலைமை ஆரோக்­கி­ய­மா­னது அல்ல. சில்­லரை முத­லீடு பணத்­தைக் குவித்­தா­லும், அதை பொறுப்­போடு நகர்த்­தும் கடமை பரஸ்­பர நிதியை மேலாண்மை செய்­வோ­ருக்­கும் உண்டு. அவர்­களின் வெற்றி – தோல்­வி­கள் சந்­தையை பெரி­தும் பாதிக்­கும். இதற்­கி­டை­யில், பல­நி­று­வ­னங்­கள், சந்­தை­யின் உயர் மதிப்­பீ­டு­களை சாத­க­மாக்கி, புதிய பங்­கு­களை விற்று தங்­கள் வருங்­கால தேவைக்கு பணத்தை குவிக்க துவங்கி­ உள்­ள­னர். மக்­கள் மத்­தி­யில் இத்­தை­கைய விற்­பனை பெரும் வர­வேற்பு பெற்­றி­ருப்­பது ஆச்­சரி­யம் அளிக்­கிறது.

நிறு­வ­னங்­களின் மதிப்பை பற்றி அதி­கம் கவ­லைப்­ப­டா­மல், விற்­பனை அதி­க­ரித்­துச் செல்­லும் போக்கு ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல. பங்­கு­களை வாங்­கிக் குவிக்­கும் மேலா­ளர்­கள் இது­பற்றி அதி­கம் யோசிப்­பது கூட இல்லை. புதிய பங்கு பரி­வர்த்­தனை உச்­சத்­தில் இருப்­பது ஏன் என்ற கேள்­விக்கு விடை இதில் கிடைக்­கிறது.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)