வரி குறைப்பு – கணக்கு தாக்கல் ஜி.எஸ்.டி., விதிமுறைகள் தளர்வு சிறு, நடுத்தர நிறுவனங்கள் வரவேற்புவரி குறைப்பு – கணக்கு தாக்கல் ஜி.எஸ்.டி., விதிமுறைகள் தளர்வு சிறு, நடுத்தர ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.65.32 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.65.32 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பணி வாழ்க்கை திட்­ட­மிடல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2017
00:14

பணி நிரந்­தரம் என்­பது, பழைய கருத்­தாக்­க­மாகி உள்ள நிலையில், பொரு­ளா­தார தேக்க நிலையின் தாக்கம், புதிய தொழில்­நுட்­பங்கள் கொண்டு வரும் மாற்றம் ஆகி­ய­வற்றின் கார­ண­மாக, பணி­யிட சவால்­களும் அதி­க­ரித்து இருக்­கின்­றன. இந்த பின்­ன­ணியில், பணி பாது­காப்பை உறுதி செய்து கொள்ள, தங்கள் துறையில் முன்­னேற்றம் காண திட்­ட­மி­டு­வதும் அவ­சி­ய­மா­கி­றது. இந்த நோக்கில், மனதில் கொள்ள வேண்­டிய முக்­கிய அம்­சங்கள்:

ஆய்வு செய்­யுங்கள்!
முதலில், தற்­போ­தைய பணியில், ஒருவர், தன் நிலை என்ன என்­பதை ஆய்வு செய்ய வேண்டும்; பணியில் உள்ள எதிர்­கால சவால்­க­ளையும் அறிய வேண்டும். நிறு­வ­னங்கள், ஊழி­யர்கள் செயல்­பாடு தொடர்­பாக, காலாண்டு அல்­லது ஆண்டு ஆய்­வுகள் செய்­வது போல, ஊழி­யர்கள், தங்கள் நிலை குறித்த சுய ஆய்வு செய்­வதன் மூலம், பணி­யி­டத்தில், தங்கள் நிலையை தெளி­வாக அறிய முடியும். உங்களுக்கென இலக்கும் வேண்டும்.

உங்களுக்கென திட்டம் தேவை:
பணி ஏணியில் ஏறிச் செல்­வது பற்றி, தெளி­வான திட்டம் இருக்க வேண்டும். தலைமை பதவி நோக்கி முன்­னேற விரும்­பினால், ஐந்து ஆண்­டு­களில், எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்­பது பற்றி, ஒரு கணிப்பு இருக்க வேண்டும். இந்­நி­லையை அடைய தேவை­யான தகு­திகள் இருக்­கின்­ற­னவா? கூடு­த­லாக திறன்கள் தேவையா என, கண்­ட­றிந்து, அதற்­கேற்ப தயா­ராக வேண்டும். உங்கள் செயல்­தி­றனை அதி­க­ரிப்­ப­திலும் கவனம் தேவை.

பயன் தரும் புதிய திறன்கள்:
பணி­யி­டத்­திற்­கான தேவைகள் மாறிக்­கொண்டே இருக்கும் சூழலில், திறன் மேம்­பாடு என்­பது, மிகவும் அவ­சியம். பழைய கல்வித் தகுதி மட்டும், இனியும் போது­மா­ன­தல்ல. ஒவ்­வொ­ரு­வரும் தங்­களை புதுப்­பித்துக் கொள்ள வேண்டும். தேவை­யெனில், ஆன் – லைனில், புதிய பாடத் திட்­டங்­களில் சேர்ந்து, புதிய திறன்­க­ளுக்­கான பயிற்சி பெறலாம். எந்த சுழ­லிலும், வளைந்து கொடுத்து முன்­னேறும் ஆற்­றலை, இது கொடுக்கும்.

அனு­பவம் தேவை:
புதிய திறன்­களை வளர்த்துக் கொள்ளும் அதே நேரத்தில், அவற்றை பயன்­ப­டுத்­து­வ­தற்­கான வாய்ப்­பு­க­ளையும் நாட வேண்டும். நிறு­வ­னத்தில், எதிர்­கால நலன் சார்ந்த திட்­டங்­களில், ஆர்­வத்­துடன் ஈடு­ப­டுத்திக் கொள்­ளுங்கள். உதா­ர­ண­மாக, பெரும்­பா­லான நிறு­வ­னங்கள், ‘டிஜிட்டல்’ பாதைக்கு மாறி வரு­கின்­றன. இந்த திசையில், உங்கள் திறன் மற்றும் ஈடு­பாடு இருக்­கும்­படி, பார்த்துக் கொள்­வது நல்­லது. எதிர்­பா­ராத பின்­ன­டை­வுகள் வந்­தாலும், சமா­ளித்து முன்­னேறும் வகையில், தெளி­வான இலக்கும் தேவை.

வழிகாட்டியை நாடுதல்:
நீங்கள் பணியாற்றும் நிறுவனம் அல்லது சார்ந்துள்ள துறையில் உங்களுக்கென ஒரு வழிகாட்டி தேவை. பல நிறுவனங்கள், வழிகாட்டுவதற்கான பிரத்யேக திட்டங்களையும் வைத்திருக்கின்றன. அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது தொழில் முறையில் உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஊக்கமளிக்கும் ஒருவரை, வழிகாட்டியாக தேடிக் கொள்ள வேண்டும். லிங்க்டுஇன் போன்ற சமூக வலைபின்னல் சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)