பதிவு செய்த நாள்
09 அக்2017
23:45

புதுடில்லி : மத்திய அரசு துறைகளுக்கு தேவையான, பொருட்களை கொள்முதல் செய்யும் பணியை மேற்கொண்டு வந்த, டி.ஜி.எஸ்., அண்டு டி., துறை, இந்த மாதத்துடன் மூடப்படுகிறது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிரிட்டிஷார், இந்தியாவிற்கு தேவையான பொருட்களை வாங்க, 1860ல், டி.ஜி.எஸ்., அண்டு டி., நிறுவனத்தை லண்டனில் தோற்றுவித்தனர். இந்நிறுவனம், 1922 முதல், இந்தியாவிலேயே செயல்படத் துவங்கி, அரசு அலுவலகங்கள் மற்றும் ராணுவத்திற்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்தது.
கடந்த, 1951ல், இந்நிறுவனம், டி.ஜி.எஸ்., அண்டு டி., என்ற துறையாக, மறு சீரமைக்கப்பட்டது. 1974ல், ரயில்வே மற்றும் பாதுகாப்பு துறைகள், அவற்றின் தேவைகளை, சுயமாக கொள்முதல் செய்து கொள்ளும் உரிமையை பெற்றன.
மத்திய வர்த்தக அமைச்சகம், 2016ல், ஜி.இ.எம்., என்ற வலைதள சந்தையை ஏற்படுத்தி, அதன் மூலம், அரசு துறைகளுக்கான பொருட்களை, வெளிப்படையாக கொள்முதல் செய்யத் துவங்கியது. இதனால், டி.ஜி.எஸ்., அண்டு டி., துறை மூடப்படுகிறது. இதில் பணியாற்றிய, 1,100 ஊழியர்கள், மத்திய அரசின், வேறு துறைகளுக்கு மாற்றப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|