பதிவு செய்த நாள்
09 அக்2017
23:47

புதுடில்லி : ‘தங்கம் விற்பனை தொடர்பான விதிகள் தளர்த்தப்பட்டு உள்ளதால், தீபாவளிக்கு, தங்க நகை விற்பனை அமோகமாக இருக்கும்’ என, நகை வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்
மத்திய அரசு, ஆக., 23ல், ஓர் அரசாணையை வெளியிட்டது. அதில், ‘2002ன், சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ், நகை விற்பனையை கொண்டு வந்திருப்பதாகவும், அதனால், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட நகை வாங்குவோர் தகவல்களை பராமரிக்க வேண்டும்’ எனவும் கூறப்பட்டிருந்தது. இதன்படி, நகை கடைகள், ‘வாடிக்கையாளரை அறிந்து கொள்வோம்’ என்ற விதிமுறைப்படி, நகை வாங்குவோரின், ‘பான் மற்றும் ஆதார்’ விபரங்களை பெற்றன. இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், நகை விற்பனை தொடர்பான அரசாணையை, திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டது.
இதனால், ‘பான், ஆதார்’ விபரங்களை வழங்காமல், நகை வாங்கலாம் என்பதால், தீபாவளிக்கு, ஆபரணங்கள் விற்பனை படுஜோராக இருக்கும் என, நகை வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
இரு மாதங்களாக, தங்க நகை விற்பனை சரிவடைந்திருந்தது. கடந்த ஆண்டு தீபாவளியை விட, இந்தாண்டு, 15 சதவீதம் விற்பனை உயரும் என, நம்புகிறோம்.-ராஜேஷ் கல்யாணராமன் இயக்குனர், கல்யாண் ஜுவல்லர்ஸ்
நகை வாங்குவதற்கு, ‘பான், ஆதார்’ கட்டாயம் என்ற விதிமுறை நீக்கப்பட்டிருப்பது, நகை வியாபாரிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும், மிகப்பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது. இரு தரப்பினருக்கும், இதை விட, மிகச் சிறந்த தீபாவளி பரிசு வேறு எதுவும் இருக்க முடியாது. நகை விற்பனை, இனி சூடுபிடிக்கும். வியாபாரம் வழக்கமாக இருந்தால் கூட, எங்களுக்கு மகிழ்ச்சி தான்.-நிதின் கந்தல்வால், தலைவர், இந்திய நவரத்தினங்கள் – தங்க ஆபரணங்கள் கூட்டமைப்பு
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|