பதிவு செய்த நாள்
11 அக்2017
05:18

மும்பை : எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின், 26வது தலைவராக பொறுப்பேற்றுள்ள, ரஜ்னிஷ் குமார், 2.68 லட்சம் ஊழியர்களுக்கு, மின்னஞ்சல் அனுப்பி உள்ளார்.
அதன் விபரம்: தொழில்நுட்பத்தின் சிறப்பம்சம், அதை பயன்படுத்துவதில் தான் அடங்கி உள்ளது. சமீபகாலம் வரை, பாரம்பரிய வங்கியாகவே அடையாளம் காணப்பட்ட, எஸ்.பி.ஐ., இன்று, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில், முன்னோடி வங்கியாக திகழ்கிறது. குறிப்பாக, இளைய சமுதாயத்திற்கும், புதிய தலைமுறையினருக்கும், எண்ணற்ற மின்னணு தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் தான், போட்டியை எதிர்கொண்டு, புதுயுக வங்கிச் சேவையை, புதிய இந்தியாவிற்கு அளிக்க முடியும்.
ஒவ்வொரு ஊழியரும், வங்கியின் முகமாக திகழ வேண்டும். நாம் தொழில்நுட்பம், வங்கிச் சேவைகள் உள்ளிட்டவற்றில், சிறந்தவர்களாக இருந்தாலும், வாடிக்கையாளரிடம் பணிவும், மரியாதையும் காட்டாதவரை, நம் வர்த்தகம் வளராது; நாம் முன்னேற முடியாது. சேவையில், பணிவும், கனிவும் தான், மிகச் சிறந்த வங்கியை உருவாக்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|