பதிவு செய்த நாள்
11 அக்2017
05:18

புதுடில்லி : ‘‘இந்தியாவில், ‘ஆப்பிள்’ நிறுவனம், ‘ஐபோன்’ தொழிற்சாலையை அமைக்க அனுமதிப்பது குறித்து, தீவிரமாக பரிசீலிக்கப்படுகிறது,’’ என, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர், அல்போன்ஸ் கண்ணன்தனம் தெரிவித்து உள்ளார்.
ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில், ‘ஐபோன்’ தொழிற்சாலையை அமைக்க, மத்திய அரசிடம், பல்வேறு சலுகைகளை கோரி உள்ளது. குறிப்பாக, ஸ்மார்ட் போன் தயாரிப்பு மற்றும் பழுது பார்ப்பு மையங்களுக்கு தேவையான உபகரணங்கள், பொறியியல் சாதனங்கள் உள்ளிட்டவற்றுக்கு, 15 ஆண்டுகளுக்கு, வரி விலக்கு கேட்டுள்ளது. மேலும், உள்நாட்டு நிறுவனங்களிடம், 30 சதவீத மூலப்பொருட்களை கொள்முதல் செய்யும் விதியில், விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரி உள்ளது.
ஆனால், ‘இந்த கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்பது சாத்தியமில்லை’ என, மார்ச்சில், மத்திய வர்த்தக துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன், ராஜ்யசபாவில் தெரிவித்திருந்தார். தற்போது, ‘ஆப்பிள் நிறுவனத்திற்கு அனுமதி அளிப்பது குறித்து, தீவிரமாக பரிசீலிக்கப்படுகிறது’ என, அல்போன்ஸ் கண்ணன்தனம் கூறியுள்ளதால், சில சலுகைகளுடன், அனுமதி வழங்கப்படும் என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|