பதிவு செய்த நாள்
11 அக்2017
05:19

புதுடில்லி : கடன் சுமை காரணமாக, டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்தை கை கழுவ, டாடா குழுமம் பரிசீலிப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தொலை தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும், டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம், 31 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி உள்ளது. அத்துடன், மாதந்தோறும், பெரும் இழப்பையும் சந்தித்து வருகிறது. அதனால், இந்நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதில், பயனில்லை எனக் கருதி, 5,000 ஊழியர்களில், பெரும்பாலானோருக்கு, தன் விருப்ப ஓய்வு அளிக்க, டாடா குழுமம் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், டாடா டெலி சர்வீசஸ் குறித்து, டாடா சன்ஸ் நிறுவன தலைவர், என்.சந்திரசேகரன், ‘டிவி’ பேட்டி ஒன்றில், மனம் திறந்து பேசி உள்ளார்.
அதன் விபரம்: டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம், படுமோசமான நிலையில் உள்ளது. மிக அதிகமான, கடன் சுமையில் சிக்கி உள்ளது. இந்நிறுவனத்தை புத்துயிரூட்டுவது, மிக கடினம் என, கருதுகிறேன். இழந்து விட்ட பணத்தை மீட்க, நல்ல பணத்தை முதலீடு செய்வதில் அர்த்தமில்லை. அதனால், இந்நிறுவனத்தை என்ன செய்வது என்பது குறித்து, நடப்பு நிதியாண்டிற்குள் முடிவெடுப்பேன்.
டாடா குழுமத்தைச் சேர்ந்த, ஒவ்வொரு நிறுவனமும் எனக்கு முக்கியம். அந்நிறுவனத்தில் ஏதேனும் பிரச்னை என்றால், உடனடியாக, தீர்வு காண முயற்சிப்பேன். தீர்வு காண முடியாத பிரச்னைக்கு, கடினமான மாற்று வழியை கையாள்வதை தவிர, வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார். அவர், டாடா டெலி சர்வீசஸ் விற்பனை குறித்து, திட்டவட்டமாக கருத்து கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டாடா குழுமத்தில், 100க்கும் அதிகமான நிறுவனங்கள், உப்பு முதல், சாப்ட்வேர் வரை, பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளன. அவற்றில், டி.சி.எஸ்., டாடா மோட்டார்ஸ் உட்பட, 29 நிறுவனங்கள், பங்குச் சந்தை பட்டியலில் உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|