பதிவு செய்த நாள்
11 அக்2017
05:20

புதுடில்லி : கடும் போட்டியை சமாளிப்பதற்காக, பொதுத் துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., விரைவில், மொபைல் போன் விற்பனையை துவக்க உள்ளது.
தொலை தொடர்பு துறையில், தற்போது, கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக, ‘ஜியோ’ நிறுவனத்தின் வருகைக்கு பின், தொலை தொடர்பு துறையில், பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதற்கு முன், ஒரு தனியார் நிறுவனம், 28 நாட்கள், ‘வேலிடிட்டி’யுடன், ஒரு, ஜி.பி., அளவிலான, ‘இன்டர்நெட், டேட்டா’வை, 292 ரூபாய்க்கு விற்றது. தற்போது, ஒரு நாளைக்கு, ஒரு, ஜி.பி., இலவசமாக வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது போல், பி.எஸ்.என்.எல்., நிறுவனமும், கடுமையான விலை குறைப்பை மேற்கொண்டது. தற்போது, 1,500 ரூபாய்க்கு, மொபைல் போன்களை, ‘ஜியோ’ விற்க துவங்கி உள்ளது. அதற்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், ஆச்சரியம் அளிக்கும் விதமாக, பி.எஸ்.என்.எல்., நிறுவனமும், மொபைல் போன் விற்பனையை துவக்க உள்ளது.
இது குறித்து, பி.எஸ்.என்.எல்., வட்டாரங்கள் கூறியதாவது: குறைந்த விலை, மொபைல் போன்களை விற்பனை செய்ய, முடிவெடுத்து உள்ளோம். இதற்காக, உள்நாட்டு நிறுவனங்களான, ‘மைக்ரோ மேக்ஸ், லாவா’ ஆகிய நிறுவனங்களுடன், ஒப்பந்தம் செய்துள்ளோம். மொபைல் போனின் விலை, 2,500 ரூபாய்க்குள் இருக்கும்; அத்துடன், ஒரு சிம் கார்டும் தரப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|