பதிவு செய்த நாள்
11 அக்2017
23:58

புதுடில்லி : ‘ஜி.எஸ்.டி.,யால் ஏற்பட்ட தாக்கம் மெல்ல மறைந்து, தொழில் துறை உற்பத்தி பெருகும்’ என, ‘மார்கன் ஸ்டான்லி’ நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜி.எஸ்.டி.,யின் தாக்கம் குறைந்து வருகிறது. முக்கிய எட்டு துறைகள், சுணக்க நிலையில் இருந்து மீள்வதற்கான அறிகுறிகள் தோன்றி உள்ளன. இத்துடன், பயணியர் வாகன உற்பத்தி மற்றும் உருக்கு தேவைப்பாடு அதிகரிப்பு போன்றவற்றால், ஆகஸ்டில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி குறியீடு, 1.7 சதவீதமாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பரில், ஏற்றுமதி வளர்ச்சி நன்கு இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. ஆகஸ்டில், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் விலை உயர்வால், சில்லரை பணவீக்கம், 3.36 சதவீதமாக உயர்ந்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனினும், சில்லரை பணவீக்கம், ரிசர்வ் வங்கியின், 4 சதவீத இலக்கை விட, குறைவாக, 3.8 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. நுகர்வும், ஏற்றுமதியும் அதிகரித்து வருவதால், இந்திய பொருளாதாரம், தெளிவான வளர்ச்சி பாதையில் செல்லும் என, தெரிகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|