பதிவு செய்த நாள்
11 அக்2017
23:59

மும்பை : இந்திய வங்கிகளின் இடர்ப்பாட்டு கடன், இதுவரை இல்லாத வகையில், ஜூன் நிலவரப்படி, 14,556 கோடி டாலராக, அதாவது, 9.50 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
வங்கிகளின் இடர்ப்பாட்டு கடன் என்பது, வாராக்கடன், மறு சீரமைக்கப்பட்ட கடன் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இந்த வகையில், இந்தாண்டு, ஜன., – ஜூன் வரையிலான, ஆறு மாதங்களில், வங்கிகளின் மொத்த கடனில், இடர்ப்பாட்டு கடன், 12.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, 15 ஆண்டுகளில் இல்லாத, அதிகபட்ச அளவாகும். மொத்த வாராக்கடனில், 12க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மட்டும், 25 சதவீதம், அதாவது, 1.78 லட்சம் கோடி ரூபாய், வசூலிக்க வேண்டும்.
‘இந்த கடனுக்காக, வங்கிகள், கூடுதலாக, 18 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டியுள்ளது’ என, ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. வாராக்கடன் பிரச்னையால், வங்கிகளிடம் புதிய கடன்களை வழங்கும் ஆர்வம் குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டில், வங்கிகளின் புதிய கடன்கள், 5 சதவீத அளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளன. இது, 60 ஆண்டுகளில் இல்லாத, குறைந்தபட்ச வளர்ச்சியாகும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|