ஐ.ஓ.டி., செலவினம் 1.29 லட்சம் டாலராக உயரும்ஐ.ஓ.டி., செலவினம் 1.29 லட்சம் டாலராக உயரும் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு ...
இந்தியா – அமெரிக்கா பரஸ்பர வர்த்தகம் 50,000 கோடி டாலரை தாண்டும்: அருண் ஜெட்லி நம்பிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2017
04:00

வாஷிங்டன் : ‘‘இந்­தியா – அமெ­ரிக்கா இடை­யி­லான, பரஸ்­பர வர்த்­த­கத்தை, 50 ஆயி­ரம் கோடி டால­ராக உயர்த்தும் இலக்கு, வெகு தொலை­வில் இல்லை,’’ என, மத்­திய நிதி­ய­மைச்­சர், அருண் ஜெட்லி நம்­பிக்கை தெரி­வித்து உள்­ளார்.

அமெ­ரிக்க தலை­ந­கர், வாஷிங்­ட­னில் உள்ள, பன்­னாட்டு நிதி­யத்­தின் தலைமை அலு­வ­ல­கத்­தில், இந்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் கூட்­ட­மைப்­பின் கருத்­த­ரங்கு நடை­பெற்­றது.

இதில், அருண் ஜெட்லி பேசி­ய­தா­வது: சில ஆண்­டு­க­ளாக, இந்­தியா – அமெ­ரிக்கா இடை­யி­லான வர்த்­த­கம், மிக­வும் வலு­வ­டைந்து வரு­கிறது. குறிப்­பாக, பாது­காப்பு மற்­றும் விமான துறை­களில் மட்­டும், எண்­ணற்ற வர்த்­தக வாய்ப்­பு­கள் காத்­தி­ருக்­கின்றன. அத­னால், இரு நாடு­களின் பரஸ்­பர வர்த்­த­கத்தை, 50 ஆயி­ரம் கோடி டால­ராக உயர்த்த வேண்­டும் என்ற இலக்கை எட்ட, நீண்ட காலம் தேவைப்­ப­டாது.

இரு நாடு­களின் பரஸ்­பர வர்த்­த­கம், 2016ல், 6,770 கோடி டால­ராக இருந்­தது. அமெ­ரிக்கா உட­னான, இந்­தி­யா­வின் உபரி வர்த்­தக மதிப்பு, 2,400 கோடி டால­ராக உள்­ளது. அது போல, அமெ­ரிக்கா, அதி­க­ள­வில் வர்த்­த­கம் புரி­யும் நாடு­களில், இந்­தியா, 9வது இடத்தை பிடித்­துள்­ளது. அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த ஏரா­ள­மான நிறு­வ­னங்­கள், இந்­தி­யா­வில் முத­லீடு செய்­துள்ளன. தற்­போது, இந்­திய நிறு­வ­னங்­கள், அமெ­ரிக்­கா­வில் அதி­கம் முத­லீடு செய்ய துவங்கி உள்ளன. இதன் மூலம், மிகச் சிறந்த வர்த்­தக வாய்ப்பை, இந்­திய நிறு­வ­னங்­கள் பெறும். அடுத்த, 10 ஆண்­டு­களில், இந்­திய விமான போக்­கு­வ­ரத்து துறை, மிகப்­பெ­ரிய விரி­வாக்­கத்தை காண உள்­ளது. இத்­து­றை­யில், அமெ­ரிக்க நிறு­வ­னங்­கள், ஏற்­க­னவே, ஆர்­வ­மு­டன் முத­லீடு செய்து வரு­கின்றன.

அமெ­ரிக்க நிறு­வ­னங்­கள், இந்­திய நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து, பாது­காப்பு துறைக்கு தேவை­யான சாத­னங்­களை தயா­ரிக்­கும் ஆலை­களை அமைக்க, முன்­வர வேண்­டும். இந்­தி­யா­வில், நிலம் கைய­கப்­ப­டுத்­தல் தொடர்­பான சட்­டங்­களில், தேவைப்­படும் மாற்­றங்­களை செய்து கொள்ள, மாநில அர­சு­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்டு உள்­ளது. இந்­தி­யா­வில், தொழி­லா­ளர் பிரச்னை மிகைப்­ப­டுத்தி கூறப்­ப­டு­கிறது; தொழி­லா­ளர் வேலை நிறுத்­தப் போராட்­டம் என்­ப­தெல்­லாம், மலை­யேறி விட்­டது. எண்­ணற்ற துறை­களில், இடை­யூ­றின்றி வர்த்­த­கம் புரி­யும் சூழல் உள்­ளது. உதா­ர­ண­மாக, வங்கி மற்­றும் விமான போக்­கு­வ­ரத்து துறை­யில் மேற்­கொள்­ளப்­பட்ட சீர்­தி­ருத்­தங்­க­ளால், வர்த்­த­கம் புரி­வது சுல­ப­மாகி உள்­ளது.

மூன்­றரை ஆண்­டு­க­ளாக, நிதி பற்­றாக்­குறை இலக்கு, நிர்­ண­யிக்­கப்­பட்ட அள­வி­லேயே பரா­ம­ரிக்­கப்­ப­டு­கிறது. திட்­டச் செல­வு­களை சீர்­ப­டுத்தி, வரி வரு­வாயை அதி­க­ரிக்க, முன்­னு­ரிமை அளிக்­கப்­ப­டு­கிறது. அதே போல, வங்­கி­களின் வாராக்­க­டன் பிரச்­னையை தீர்க்­க­வும், முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­ப­டு­கிறது. இதற்­காக, புதிய சட்­டங்­கள், சட்­டத்­தி­ருத்­தங்­கள் ஆகி­யவை மேற்­கொள்­ளப்­பட்டு உள்ளன. இது போன்ற நட­வ­டிக்­கை­க­ளால் ஏற்­படும் தாக்­கம், தற்­கா­லி­க­மா­கவே இருக்­கும். நடுத்­த­ரம் மற்­றும் நீண்ட கால அடிப்­ப­டை­யில், மிகச் சிறந்த பயன்­கள் கிடைக்­கும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)