6 மாதங்களில் இல்லாத அளவு நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி, ‘சூப்பர்’  தங்கம் இறக்குமதியும் குறைந்தது6 மாதங்களில் இல்லாத அளவு நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி, ‘சூப்பர்’ தங்கம் ... ... ரூபாயின் மதிப்பும் உயர்வு - ரூ.64.68 ரூபாயின் மதிப்பும் உயர்வு - ரூ.64.68 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2017
00:31

கடந்த, சாம்­வாட் – 2073ம் ஆண்டு ( 2016 தீபா­வளி முதல் 2017 தீபா­வளி வரை) கால­கட்­டத்­தில், தேசிய பங்­குச் சந்தை குறி­யீடு, நிப்டி, சுமார் 1500 புள்­ளி­கள் அதா­வது 17 சத­வீ­தம் உயர்ந்­துள்­ளது.

உயர் பண­ம­திப்பு நீக்­கம் மற்­றும் பொரு­ளா­தார மந்த நிலை ஆகி­ய­வற்­றுக்­கி­டை­யி­லும் இவ்­வ­ளர்ச்­சி­யைக் கண்­டது குறிப்­பி­டத்­தக்­கது. இதற்கு உறு­து­ணை­யாக இருந்­தது, சர்­வ­தேச பங்­கு­களின் வளர்ச்சி மற்­றும் உள்­நாட்டு முத­லீட்டு நிறு­வ­னங்­கள், பரஸ்­பர நிதி நிறு­வ­னங்­கள் போன்­ற­வை­யா­கும். இவை கடந்த ஆறு மாதங்­களில், தங்­க­ளது முத­லீட்டை பன்­ம­டங்­கு­ அ­தி­க­ரித்­துள்ளன. மேலும், உல­கின் வளர்ந்த நாடு­களின் வட்­டி­வி­கித உயர்­வும், அந்­நா­டு­களின் சந்­தை­க­ளுக்கு சாத­க­மாக அமைந்­தது.

வரும் தீபா­வ­ளி­யன்று துவங்க இருக்­கும், புதிய ஆண்­டான, சாம்­வாட் 2074 பல முக்­கிய நிகழ்­வு­களின் அடிப்­ப­டை­யில் அதன் போக்கு அமை­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.முக்­கி­ய­மாக, உலக மத்­திய வங்­கி­களின் வட்டி விகி­தத்­தில் ஏற்­படும் மாற்­றங்­கள், பொரு­ளா­தார வளர்ச்சி, உள்­நாட்­டில் நடை­பெற உள்ள தேர்­தல்­கள், அர­சி­யல் மாற்­றங்­கள், கொள்கை முடி­வு­கள், பணப்­பு­ழக்­கம், கச்சா எண்­ணெய் விலை மாற்­றங்­கள் மற்­றும் சந்தை முத­லீ­டு­கள் போன்­ற­வற்­றின் அடிப்­ப­டை­யில், சந்­தை­யின் போக்கு அமை­யும்.

அமெ­ரிக்கா அந்­நாட்­டில் வரி­வி­கி­தத்­தில் மாற்­றம் கொண்டுவர உள்­ளது. நாடு­க­ளுக்­கி­டையே நிலவி வரும் அசா­தா­ரண சூழல் மற்­றும் அதன் தாக்­கங்­கள் சந்­தை­யில் பிர­தி­ப­லிக்­கும்.நடப்பு நிதி­யாண்­டின் அரை பாகம் முடி­வுற்ற நிலை­யில் (ஏப்­ரல் – செப்­டம்­பர்), அடுத்த பாகத்­தில் நிறு­வ­னங்­களின் வளர்ச்சி மற்­றும் நிதி அறிக்­கை­கள், வர­வி­ருக்­கும் 2018ம் ஆண்­டின் மத்­திய பட்­ஜெட் போன்­றவை, சந்­தை­யில் மிக முக்­கிய பங்­காற்­றும்.இந்த சாம்­வாட் – 2074ம் ஆண்­டில், நிப்டி ரெசிஸ்­டென்ஸ், 10267 ஆகும். இதை கடக்­கும் நிலை­யி­லும், மாத முடிவு இதற்கு மேல் இருக்­கும்­பட்­சத்­தி­லும், அடுத்த இலக்கு 11,085 ஆகும்.

சாம்­வாட் – 2074ம் ஆண்­டில் கவ­னிக்க வேண்­டிய பங்­குகள்:
அட்­வாஸ்டு என்­ஸைம்ஸ், ஹெரிட்­டேஜ் புட்ஸ், எஸ்.பி. அப்­பா­ரல்ஸ், டாடா எலெக்ஸி, கிரீன்ப்ளை இண்­டஸ்ட்­ரீஸ்

-முருகேஷ் குமார்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)