6 மாதங்களில் இல்லாத அளவு நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி, ‘சூப்பர்’  தங்கம் இறக்குமதியும் குறைந்தது6 மாதங்களில் இல்லாத அளவு நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி, ‘சூப்பர்’ தங்கம் ... ... ரூபாயின் மதிப்பும் உயர்வு - ரூ.64.68 ரூபாயின் மதிப்பும் உயர்வு - ரூ.64.68 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கமாடிட்டி சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2017
00:33

கச்சா எண்ணெய்
கச்சா எண்­ணெய், கடந்த வாரம் ஆரம்­பத்­தில், சரி­வில் வியா­பா­ரம் துவங்­கி­யது. இருப்­பி­னும், அமெ­ரிக்க சந்­தை­யில், கச்சா எண்­ணெய் பொருட்­கள் தேவை­யா­னது, கடந்த ஒரு மாதத்­தில், 1.3 சத­வீ­தம் அதி­க­ரித்து, தின­சரி, 20.24 மில்­லி­யன் பேரல்­கள் என்ற அளவை எட்­டி­யது.

ஆனா­லும், புதன் அன்று வெளி­வந்த, இ.ஐ.ஏ., எனும், வாரம் ஒரு­முறை வெளி­வ­ரும், எண்­ணெய் இருப்பு விபரப்­படி, 1.32 மில்­லி­யன் பேரல்­கள் அதி­க­ரித்து, 63.78 மில்­லி­யன் பேரல்­கள் இருப்பு ஆகின. இத­னால் விலை­யில் சிறிய சரிவு நிகழ்ந்­துள்­ளது.ஒபெக் அமைப்பு, உற்­பத்தி குறைப்பு நட­வ­டிக்கை மூல­மாக, எண்­ணெய் விலையை அதி­க­ரிக்க செய்­யும் போக்­கை, அனைத்து உறுப்பு நாடு­களும் தொடர்ந்து கடை­ப்பி­டிக்க வேண்­டும் என, தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கிறது. இதற்கு ஆத­ர­வாக, ரஷ்­யா­வும் இணைந்து செயல்­ப­டு­கிறது. கடந்த நான்கு மாத கால­மாக, எண்­ணெய் விலை உயர்ந்து வரு­கிறது. அதா­வது, மே 2017ல் ஒரு பேரல் சரா­சரி விலை, 43 டால­ரில் இருந்து அக்­டோ­பர் மாதம் ஒரு பேரல் சரா­சரி விலை, 50 டாலர் என உயர்ந்து காணப்­ப­டு­கிறது.

வரும் நாட்­களில் எண்­ணெய் விலை உய­ரும் போக்கு நில­வு­கிறது. அமெ­ரிக்கா மற்­றும் ஈரான் நாடு­க­ளுக்கு இடையே, 2015ம் ஆண்டு அணு ஆயுத ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­னது. இதை பல­முறை ஈரான் மீறி­யுள்­ளது. தற்­போது டிரம்ப் தலை­மை­யி­லான அமெ­ரிக்க அரசு இதை வன்­மை­யாக கண்­டித்து வரு­கிறது. இத­னால் ஏற்­பட்ட அசா­தா­ரண சூழல் கார­ண­மாக, கடந்த வெள்­ளி­யன்று, 2 சத­வீ­தம் அள­வுக்கு விலை உயர்ந்­தது.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 3,280 3,230 3,340 3,400என்.ஒய்.எம்.இ.எக்ஸ்., (டாலர்) 50.50 49.30 52.30 54.00

தங்கம், வெள்ளி
தங்­கம் மற்­றும் வெள்ளி ஆகி­யவற்­றின் விலை, தொடர்ந்து, நான்கு வார சரி­வுக்கு பின், கடந்த வாரம் உயர்ந்து வர்த்­த­க­மா­கி­யது.
தங்­கம் ஒரு அவுன்ஸ், 28 டாலர் அதி­க­ரித்து,1,303 டாலர் ஆனது. வெள்­ளி­யா­னது, 61 சென்ட்ஸ் அதி­க­ரித்து, ஒரு அவுன்ஸ் 17.40 டாலர் என்ற அளவை எட்­டி­யது.அமெ­ரிக்க நாணய குறி­யீ­டான, டாலர் இன்­டெக்ஸ் சரி­வும், பண­வீக்க விகி­தம் கடந்த மாதம் அதி­க­ரித்­த­தன் கார­ண­மாக, வரும் டிசம்­பர் மாதம் நடை­பெற உள்ள, அமெ­ரிக்க மத்­திய வங்­கி­யின் நிதிக் கூட்­டத்­தில், வட்டி விகி­தம் உயர்த்த சிர­மம் காணப்­படும் என்ற கருத்து கார­ண­மா­க­வும் இவ்­விலை உயர்வு நிகழ்ந்­தது. மேலும், அதி­க­ரித்து வரும் பண­வீக்­கம் கார­ண­மாக, அரசு கரு­வூ­லங்­களின் ஆதா­யம் குறைந்து வரு­கிறது. இத­னால், முத­லீட்­டா­ளர்­களின் தங்­கம் மீதான முத­லீட்டு ஆர்­வம் அதி­க­ரித்­த­தும் விலை உயர்­வுக்கு ஒரு கார­ண­மா­கும்.

அமெ­ரிக்கா ஈரான் நாடு­க­ளுக்கு இடையே நிலவி வரும் அசா­தா­ரண சூழ­லும் கார­ண­மாக அமைந்­தது. அணு ஆயுத ஒப்­பந்­தத்தை, ஈரான் பல முறை மீறி­ய­தன் கார­ண­மாக, அமெ­ரிக்க அதி­பர், டிரம்ப் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார். இத­னால் சந்­தை­யில் தங்­கம் விலை மள­ம­ள­வென உயர்ந்­தது. ஆப­ரண சந்­தை­யில், இந்­தியா மற்­றும் சீனா நாடு­கள் தேவை­யில் முன்­னிலை வகிக்­கின்றன. இவை அதி­க­ள­வில் ஆப­ரண இறக்­கு­மதி செய்­யும் நாடு­கள் ஆகும். இந்­தி­யா­வில் திரு­வி­ழாக் காலம் என்­ப­தால், தங்­கம் இறக்­கு­ம­தி­யும் அதி­க­ரித்­துள்­ளது. மேலும் டால­ருக்கு நிக­ரான, இந்­திய ரூபாய் மதிப்பு வீழ்ச்­சி­ய­டைந்­த­தும் உள்­நாட்­டில் தங்­கம் விலை அதி­க­ரித்து காணப்­ப­டு­கிறது. வரும் நாட்­களில் விலை மேலும் அதி­க­ரிக்க கூடும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தங்கம்:
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 29,700 29,480 29,900 30,220காம்எக்ஸ் (டாலர்) 1,292 1,280 1,311 1,320


வெள்ளி:
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 40,100 39,400 40,500 40,980காம்எக்ஸ் (டாலர்) 16.60 16.22 16.90 17.25

செம்பு:
செம்பு விலை, தொடர்ந்து மூன்­றா­வது வார­மாக, கடந்த வார­மும் உயர்ந்து வியா­பா­ர­மா­னது. சர்­வ­தேச சந்­தை­யில், ஒரு பவுண்டு, 3.12 டாலர் என்ற நிலை­யில் தற்­போது உள்­ளது. இது முந்­தைய வாரத்தை விட, 0.22 செண்ட்ஸ் உயர்­வா­கும்.

சீனா நாட்­டின் சந்­தை­யில், தொடர் விடு­மு­றைக்கு பின் (அக்­டோ­பர் 1 முதல் 8ம் தேதி வரை) செம்­பின் தேவை அதி­க­ரித்து காணப்­பட்­டது. மேலும், இறக்­கு­ம­தி­யும் உய­ரும் என்ற கணிப்பு கார­ண­மா­க­வும், விலை உயர்வு நிகழ்ந்­தது. அமெ­ரிக்க நாண­யத்­தில் ஏற்­பட்ட வீழ்ச்­சி­யும், சந்­தை­யின் போக்­குக்கு சாத­க­மாக அமைந்­தது. வரும் நாட்­க­ளி­லும் இதே நிலை தொட­ரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 445.10 442.00 450.00 455.00

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)