6 மாதங்களில் இல்லாத அளவு நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி, ‘சூப்பர்’  தங்கம் இறக்குமதியும் குறைந்தது6 மாதங்களில் இல்லாத அளவு நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி, ‘சூப்பர்’ தங்கம் ... ... ரூபாயின் மதிப்பும் உயர்வு - ரூ.64.68 ரூபாயின் மதிப்பும் உயர்வு - ரூ.64.68 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
நமது நாளைய லாபத்தை இன்றே தாரை வார்க்­க­லாமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2017
00:35

உல­கின் மிக முக்­கிய முத­லீட்­டா­ள­ரான, வாரன் பப்­பெட் அறி­வு­ரை­களில் மிக முக்­கி­ய­மான ஒன்று, ’ஒரு பங்கை வாங்­கும் ­போது, அதன் விலை­யைப் பார்ப்­ப­தைக் காட்­டி­லும், நாம் கொடுக்­கும் விலைக்கு அந்த பங்கு உரிய மதிப்பை கொண்­டதா என்று பாருங்­கள்’ என்­ப­தா­கும்.

’மதிப்பு’ என்று பப்­பெட் சொல்­வது, மக்­கள் அந்த பங்கை பற்றி என்ன நினைக்­கி­றார்­கள் என்­பது அல்ல. அந்த நிறு­வ­னத்­தின் சொத்­துக்­களின் இன்­றைய மதிப்­பை­யும், பல ஆண்­டு­கள் கழித்து, அந்த நிறு­வ­னம் அடை­யப் போகும் நிகர லாபத்­தின் இன்­றைய மதிப்­பீட்­டை­யும் சார்ந்தே நம் முத­லீ­டு­கள் இருக்க வேண்­டும் என்­பதே அவர் அறி­வு­ரை­யின் உட்­பொ­ருள்.

விதி விலக்கு:
நாம் லாபம் அடைய வேண்­டு­மெ­னில் கடைப்­பி­டிக்க வேண்­டிய இரண்டு விதி­கள் என்று அவர் சொல்­வது இது­தான்:விதி எண் ஒன்று: பணத்தை இழக்­கா­தீர்­கள்.விதி எண் இரண்டு: முதல் விதியை மறக்­கா­தீர்­கள்! லாபத்தை மட்­டுமே குறிக்­கோ­ளாக கொள்­ளும் பங்­குச் சந்தை ஆர்­வ­லர்­க­ளுக்கு, அத­னால் பெரும் பய­னுற்ற ஒரு முத­லீட்­டா­ளர் சொல்­லும் அறி­வு­றுத்­தல், ஏன் இழப்பை மையப்­ப­டுத்­து­கிறது என்று நாம் யோசிக்க வேண்­டும்.

பங்­குச் சந்­தை­யில் ஏற்­படும்இழப்­பின் நிரந்­த­ரத் தன்­மையை நன்கு உணர்ந்­த­தால் மட்­டுமே, அவர் இப்­ப­டிச்சொல்­கி­றார். எக்­கா­ர­ணம் கொண்­டும் ஒரு முத­லீட்­டா­ளர் நிரந்­தர இழப்­ப­டை­யக் கூடாது என்­பதே அவர் இப்­படி சொல்­வ­தற்கு முக்­கிய கார­ணம். ஆனால், நாம் இதை எந்த அளவு பொருட்­ப­டுத்­து­கி­றோம்?பங்­கு­களை வாங்­கும் பெரும்­பா­லா­னோர், அதன் விலையை மட்­டுமே மையப்­ப­டுத்தி, முத­லீட்டு முடி­வு­களை எடுக்­கி­ன்றனர். விலை உயர, உயர ஒரு பங்கை வாங்க வரும் முத­லீட்­டா­ளர்­களின் ஆர்­வம் பன்­ம­டங்கு கூடு­கிறது.

ஆர்­வம் கூடும் தரு­ணங்­களில் ஆய்வு குறைந்­து­வி­டு­வ­தும், எங்கே நாம் முடி­வெ­டுப்­ப­தற்­குள் விலை மேலும் கூடி­வி­டுமோ என்ற அச்­ச­மும், முடி­வு­களை பின்­னி­ருந்து வேகப்­ப­டுத்­து­கின்றன. அந்த வேகத்தை குறைப்­பதை யாரும் விரும்­பு­வ­தில்லை.இந்த அவ­ச­ரம் ஏதோ சிறு­மு­த­லீட்­ட­ளர்­க­ளி­டம் மட்­டுமே இருப்­ப­தாக நினைக்க வேண்­டாம். பெரு­மு­த­லீட்­டா­ளர்­களும், பரஸ்­பர நிதி மேலா­ளர்­க­ளும்­கூட இதற்கு விதி­வி­லக்கு அல்ல.

விலை அதிகம்:
இன்­னும் சொல்­லப்­போ­னால், சந்தை மந்­தை­ம­ய­மாக மாறி­வி­டு­வ­தற்கு முக்­கிய கார­ணம், பங்­கு­களில் கிடுகிடு விலை ஏற்­றம் மட்­டுமே. அதி­ர­டி­யாக கூடும் விலை, ஒரு­வித மாயை ஏற்­பட கார­ண­மாகி விடு­கிறது. அத்­த­கைய விலை ஏற்­றம், எந்த வகை­யி­லும் அந்த நிறு­வ­னத்­தின் தர ஏற்­ற­மாக அமை­யாத சூழல்­கள் ­தான் அதி­கம். இப்­படி ஒரு சூழல் அமை­யும்­போது, பல நிறு­வ­னங்­களின் பங்கு விலை அதன் உண்மை மதிப்­பை­விட மிக அதி­க­மாக நில­வக்­கூ­டும். அப்­படி அமை­யும் சூழ­லில், அத்­த­கைய பங்­கு­களை சந்­தை­யின் சாதா­ரண முத­லீட்­டா­ளர்­களும், முக்­கிய பெரு­மு­த­லீட்­டா­ளர்­களும் போட்டி போட்டு வாங்­கு­வதை அடிக்­கடி காண­லாம்.

வர­லாறு நமக்­குச் சொல்­லும் ஒரே பாடம், எல்லா­ரும் ஒன்­றையே செய்­வ­தால், அது சரி என்று ஆகி­வி­டாது என்­பதே. அத்­த­ரு­ணங்­களில், நாம் சந்­தைக்கு எதிர்­ம­ய­மான நிலைப்­பாட்டை எடுக்க வேண்­டும். அப்­படி நடக்க, பப்­பெட் சொல்­லும் அறி­வு­ரை­கள் பெரி­தும் உத­வும்.’விலை அதி­கம் கொடுப்­பதுஎன்­பது, நம் நாளைய லாபத்தை, இன்­றைக்கே இன்­னொ­ரு­வ­ருக்கு தாரை­வார்க்­கும் செயல்’ என்­ப­தைப்புரிந்து நடப்­பதே, நமக்கு நன்மை பயப்­ப­தாக அமை­யும்.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)