பதிவு செய்த நாள்
17 அக்2017
05:16

மும்பை : இந்திய மருந்து நிறுவனங்கள்,பல தடைகளுக்கு இடையிலும், ஜூன் – செப்., வரையிலான, இரண்டாவது காலாண்டில், சிறப்பான வளர்ச்சி கண்டிருக்கும் என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.இது குறித்து, எச்.டி.எப்.சி., செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஆய்வாளர், அமெய் சால்கி கூறியதாவது:இந்தாண்டு, ஜன., – ஜூன் வரை, மருந்து நிறுவனங்களின் செயல்பாடு மந்தமாக இருந்தது. ஆனால், ஜூலை –செப்., வரையிலான, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நன்றாக இருந்தது.இதற்கு, ஜி.எஸ்.டி., அமலுக்கு பின், மருந்து கடைகள் மீண்டும் அதிகளவில், மருந்துகளை கொள்முதல் செய்ததும், சில நிறுவனங்கள், அமெரிக்க சந்தையில் புதிய மருந்துகளை வெளியிட்டதும், முக்கிய காரணங்களாகும். இதனால், ஜூலை – செப்., காலாண்டில், மருந்து நிறுவனங்களின் வருவாய், முதல் காலாண்டை விட, 15 சதவீதம் அதிகரித்திருக்கும்; மொத்த லாபம், 18லிருந்து, 22 சதவீதமாக உயர்ந்து இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.அதே சமயம், சன் பார்மா நிறுவனத்தின் விற்றுமுதல், 15 சதவீதம் குறையும் என, தெரிகிறது.இதன் துணை நிறுவனமான, டாரோவில் ஏற்பட்டுள்ள சரிவு, மூல மருந்துகளின் அறிமுகம் குறைந்தது போன்றவை, இதற்கு காரணம் என்றாலும், மொத்த லாபம், முந்தைய காலாண்டை விட, அதிகமிருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.டாக்டர் ரெட்டீஸ் லேப்., நிறுவனத்தின் லாபத்திற்கு, ‘ஜிகோபக்ஸோன், ஜிநுவரிங்’ போன்ற, புதிய மருந்துகளின் அறிமுகம் கைகொடுக்கும்.சிப்லா நிறுவனத்தின் விற்றுமுதல், 7 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கும்.லுாபின் நிறுவனத்தின், மருந்து விற்பனை மீண்டும் உயர்ந்துள்ளதால், வருவாய், 4 சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|