பதிவு செய்த நாள்
17 அக்2017
05:17

புதுடில்லி : அமெரிக்காவில், பாஸ்மதி அரிசி விற்பனையில், முன்னணியில் உள்ள, எல்.டி., புட்ஸ் நிறுவனம், அங்கு, துரித உணவு தொழிற்சாலையை அமைத்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, அஸ்வனி அரோரா கூறியதாவது:நிறுவனத்தின், ‘ராயல்’ பிராண்டு பாஸ்மதி அரிசி மூலம், ஏற்கனவே, அமெரிக்காவில், வலுவான நிலையில் உள்ளோம். இதையடுத்து, இயற்கை முறையில் உற்பத்தியாகும் பாஸ்மதி அரிசியை, ‘எக்கோ லைப்’ பிராண்டில், துரித உணவாக அறிமுகப்படுத்த உள்ளோம். இதற்காக, 50 லட்சம் டாலர் முதலீட்டில், அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையில், டிச., முதல், வணிக ரீதியிலான உற்பத்தி துவங்கும். தொழிற்சாலைக்கு தேவையான அனைத்து பொருட்களும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.அமெரிக்காவில், எல்.டி., புட்ஸ் நிறுவனத்தின், ‘ராயல்’ பிராண்டு பாஸ்மதி அரிசி, அமெரிக்க சந்தையில், 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் விற்றுமுதல், கடந்த நிதியாண்டில், 3,330 கோடி ரூபாயாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|