பதிவு செய்த நாள்
17 அக்2017
05:17

ஐதராபாத் : ‘ஆப்பிள்’ நிறுவனம், ‘இ –வாலட்’ எனப்படும், மின்னணுபணப்பை சேவையில் களமிறங்க திட்டமிட்டு உள்ளது.இது குறித்து, ஆப்பிள் நிறுவனத்தின், இணைய சாப்ட்வேர் மற்றும் சேவைகள் பிரிவின் மூத்த துணைத் தலைவர், எடி க்யூ கூறியதாவது:இந்தியாவில், மின்னணு பணப் பரிவர்த்தனை சேவையில் களமிறங்க, ஆப்பிள் திட்டமிட்டு உள்ளது. இச்சேவை, ‘ஆப்பிள் பே’ என்ற பிராண்டு பெயரில் வழங்கப்படும். இந்தியா போன்ற, மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு உள்ள, மின்னணு பணப்பை சேவை சந்தையில் களமிறங்க, ஆப்பிள் ஆர்வமாக உள்ளது. எனினும், இச்சேவைக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதை தவிர்த்து, ஏற்கனவே, இத்துறையில் உள்ள நிறுவனத்துடன் இணைந்து செயல்பட, ஆப்பிள் விரும்புகிறது. குறிப்பாக, இத்துறையில் முன்னணியில் உள்ள, ‘பேடிஎம்’ போன்ற நிறுவனங்களுடன், ஆப்பிள் இணைந்து செயல்படும்.இவ்வாறு அவர் கூறினார் .ஆப்பிள் நிறுவனம், பெங்களூரில், ‘ஐபோன் எஸ்.இ.,’ சாதனங்களை, ஏற்கனவே, தயாரிக்கத் துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|