மின்னணு பணப்பை சேவையில் களமிறங்கும், ‘ஆப்பிள்’ நிறுவனம்மின்னணு பணப்பை சேவையில் களமிறங்கும், ‘ஆப்பிள்’ நிறுவனம் ... ரூபாயின் மதிப்பும் சரிவு : ரூ.64.89 ரூபாயின் மதிப்பும் சரிவு : ரூ.64.89 ...
உணவு பொருட்கள் விலை குறைவு : பணவீக்கம் சரிந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2017
05:18

புதுடில்லி, : செப்டம்பரில், காய்கறிகள் உள்ளிட்ட, உணவுப் பொருட்கள் விலை குறைந்ததால், மொத்த விலை பணவீக்கம் சரிவடைந்து உள்ளது.


இது குறித்து, மத்தியவர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:மொத்த விற்பனை விலை அடிப்படையிலான பணவீக்கம், செப்டம்பரில், 2.6 சதவீதமாக சரிவடைந்து உள்ளது; இது, ஆகஸ்டில், முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத வகையில், 3.24 சதவீதமாக உயர்ந்து இருந்தது. அதே சமயம், 2016 செப்டம்பரில், மொத்த விலை பணவீக்கம், 1.36 சதவீதமாக இருந்தது.செப்டம்பரில், உணவுப் பொருட்கள் பணவீக்கம், 2.04 சதவீதமாக குறைந்துள்ளது; இது, ஆகஸ்டில், 5.75 சதவீதமாக இருந்தது. 


இதே காலத்தில், காய்கறிகள் பணவீக்கம், 44.91லிருந்து, 15.48 சதவீதமாக சரிவடைந்து உள்ளது.உணவுப் பொருட்கள் பணவீக்கம் குறைந்துள்ள போதிலும், வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததை அடுத்து, அதன் பணவீக்கம், 79.78 சதவீதமாக அதிகரித்துள்ளது. அது போல, முட்டை, மாமிசம், மீன் ஆகியவற்றின் பணவீக்கம், 5.47 சதவீதமாக உயர்ந்துள்ளது.  தயாரிப்பு பொருட்கள் பணவீக்கம், செப்டம்பரில், 2.72 சதவீதமாக உயர்ந்துள்ளது; இது, ஆகஸ்டில், 2.45 சதவீதமாக இருந்தது.இதே காலத்தில், எரிபொருள் மற்றும் மின்சார பணவீக்கம், 9.99லிருந்து, 9.01 சதவீதமாக குறைந்துள்ளது. 


கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், பெட்ரோல், டீசல் விலை, தொடர்ந்து இரு மாதங்களாக உயர்ந்தது. இதனால், மதிப்பீட்டு மாதத்தில்,எரிபொருள் பணவீக்கம் அதிகரித்துள்ளது. உள்நாட்டில், மின் உற்பத்தி குறைந்ததால், மின்சார பணவீக்கம் உயர்ந்துள்ளது. பருப்பு வகைகள் விலை தொடர்ந்து குறைந்து வந்ததால், அவற்றுக்கான பணவீக்கம், 24.26 சதவீதமாக குறைந்துள்ளது. அது போல, உருளைக்கிழங்கு, கோதுமை ஆகியவற்றின் பணவீக்கம், முறையே, 46.52 சதவீதம் மற்றும் 1.71 சதவீதமாக குறைந்துள்ளன. ஜூலை மாதத்திற்கான, மொத்த விலை பணவீக்கம், 1.88 சதவீதமாக, மாற்றமின்றி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


'ரெப்போ' வட்டி குறைக்கப்படுமா?காய்கறிகள், உணவு தானியங்கள் விலை குறைந்ததால், செப்டம்பரில், சில்லரை பணவீக்கம், 3.28 சதவீதமாக, மாற்றமின்றி காணப்பட்டது.கடந்த வாரம், அரசு வெளியிட்ட புள்ளி விபரப்படி, ஆகஸ்டில், தொழில் துறை உற்பத்தி, ஒன்பது மாதங்களில் இல்லாத வகையில், 4.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.தற்போது, செப்டம்பரில், மொத்த விலை பணவீக்கமும் குறைந்துள்ளதாக, அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, 2ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், 'வங்கிகளுக்கு வழங்கும், குறுகிய கால கடனுக்கான, 'ரெப்போ' வட்டி விகிதம், மாற்றமின்றி, 6 சதவீதமாகவே நீடிக்கும்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.அதன்பின், தொழில் துறை உற்பத்தி, மொத்த விலை பணவீக்கம் ஆகியவற்றின் வளர்ச்சி விபரங்கள் வெளியாகி உள்ளதால், டிசம்பரில், 'ரெப்போ' வட்டி விகிதங்களை, ரிசர்வ் வங்கி குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)