பதிவு செய்த நாள்
25 அக்2017
06:27

ஐதராபாத் : ‘‘அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த ஆண்டு, இந்திய, ஐ.டி., துறையின் எழுச்சிக்கு கை கொடுக்கும்,’’ என, ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின், தலைமை நிதி அதிகாரி, வி.பாலகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:உலகின், மிகப்பெரிய பொருளாதார நாடாக, அமெரிக்கா விளங்குகிறது. அங்கு, தற்போது வட்டி விகித உயர்வு குறித்து பேசப்படுகிறது. வேலையில்லா திண்டாட்டம் குறைந்துள்ளது.இந்நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை குறைக்க உள்ளதாக, அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.அதனால், அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருவது தெரிகிறது. அந்நாட்டின், ஐ.டி., துறை செலவினம், இந்தாண்டு, 4 – 4.5 சதவீதமாக உயரும் என, கார்ட்னர் நிறுவனம் மதிப்பிட்டு உள்ளது. இந்த வாய்ப்பை, இந்திய, ஐ.டி., துறை பயன்படுத்திக் கொள்ளும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்த அம்சங்கள் காரணமாக, 2018ல், அமெரிக்கா மூலம், இந்திய, ஐ.டி., நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரிக்கும் என, தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|