பதிவு செய்த நாள்
25 அக்2017
06:28

புதுடில்லி : ‘‘ஆக., – செப்., மாதங்களுக்கான, ‘ஜி.எஸ்.டி.ஆர்., – 3பி’ கணக்கை, தாமதமாக தாக்கல் செய்ததற்கான அபராதம் ரத்து செய்யப்பட்டு உள்ளது,’’ என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்து உள்ளார்.‘ஏற்கனவே வசூலிக்கப்பட்ட அபராதம், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வங்கிக் கணக்கில், வரவு வைக்கப்படும்’ என்றும், அவர் கூறினார்.மத்திய அரசு, ஏற்கனவே, ஜூலைக்கான கால தாமத கட்டணத்தை, ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம், செலுத்திய வரி உள்ளிட்ட விபரங்களை, அடுத்த மாதம், 20க்குள், ‘ஜி.எஸ்.டி.ஆர்., – 3பி’ படிவத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், மத்திய, மாநில அரசுகளுக்கு, நாள் ஒன்றுக்கு, தலா, 100 ரூபாய் வீதம் அபராதம் செலுத்த வேண்டும்.இந்த வகையில், ஜூலைக்கான, 55.87 லட்சம் கணக்குகளில், 33.98 லட்சம் மட்டுமே, ‘கெடு’ தேதிக்கு முன் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இது, ஆக., – செப்., மாதங்களில், முறையே, 28.46 லட்சம் மற்றும் 39.40 லட்சம் ஆக இருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|