பதிவு செய்த நாள்
25 அக்2017
06:28

புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, என்.எல்.சி., நிறுவனத்தின் பங்கு விற்பனை, இன்று துவங்குகிறது.இது குறித்து, நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:என்.எல்.சி., நிறுவனத்தில், மத்திய அரசு கொண்டுள்ள பங்குகளில், 5 சதவீதத்தை விற்பனை செய்து, 800 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. ஒரு பங்கின் விலை, 94 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இப்பங்கு வெளியீடு, இன்று துவங்குகிறது. முதல் நாளன்று நடைபெறும் பங்கு விற்பனையில், நிதி நிறுவனங்கள் பங்கேற்கும். இரண்டாம் நாளில், சில்லரை முதலீட்டாளர்கள், பங்குகளில் முதலீடு செய்யலாம். அவர்கள், 3.5 சதவீத தள்ளுபடி விலையில் பங்குகளை வாங்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம், 72,500 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.இதையொட்டி, பொதுத் துறை நிறுவனங்களில், குறிப்பிட்ட சதவீத பங்குகளையும், ஒருசில நிறுவனங்களின் பெரும்பான்மை பங்கு களையும் விற்க,மத்திய அரசு திட்டமிட்டுஉள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|