பதிவு செய்த நாள்
25 அக்2017
10:21

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வரலாற்றில் இன்று(அக்., 25) புதிய சாதனை நிகழ்ந்துள்ளன. முதன்முறையாக சென்செக்ஸ் 33 ஆயிரம் புள்ளிகளையும், நிப்டி 10,300 புள்ளிகளையும் கடந்துள்ளது.
வாராக் கடன்களால் திணறிவரும் வங்கிகளுக்கு புத்துயிரூட்டும் வகையில், 2.11 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் என, மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதுதவிர உள்கட்டமைப்பிற்கும் ரூ.6.92 லட்சம் கோடியை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதன்காரணமாக இன்றைய வர்த்தகம் அதிகளவில் ஏற்றம் கண்டன.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 509.99 புள்ளிகள் உயர்ந்து 33,117.33-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 132.85 புள்ளிகள் உயர்ந்து 10,340.55-ஆகவும் வர்த்தகமாகின.
முன்னதாக சென்செக்ஸ் 32,699.86 மற்றும் நிப்டி 10,251.85 புள்ளிகளை எட்டியதே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காலை 10 மணியளவில் அந்த சாதனை சரிந்து, சென்செக்ஸ் 32,855 புள்ளிகளிலும், நிப்டி 10,256 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.
இன்றைய வர்த்தகத்தில், பொதுத்துறை நிறுவன வங்கிகள், பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, ஐஓபி., ஐடிபிஐ., ஆந்திரா வங்கி, யூகோ வங்கி உள்ளிட்ட வங்கிகளின் பங்குகளும், உள்கட்டமைப்பு தொடர்பான நிறுவன பங்குகளான எல் அண்ட் டி, என்ஹெச்பிசி., ஹெச்சிசி, என்சிசி போன்றவைகள் அதிக ஏற்றம் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|