பதிவு செய்த நாள்
26 அக்2017
00:45

புதுடில்லி : ‘‘-அமெரிக்காவைச் சேர்ந்த, ‘ஆப்பிள்’ நிறுவனத்திற்கு, கர்நாடகாவில், ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க, ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது,’’ என, அம்மாநில தொழில் துறை அமைச்சர், ஆர்.வி.தேஷ்பாண்டே தெரிவித்து உள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது: கர்நாடக அரசு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆப்பிள் நிறுவனம், மாநிலத்தில் ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க, அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் மூலம், முதலீடுகள் அதிகரிக்கும்; ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக, ஆப்பிள் நிறுவனம் – மத்திய அரசு இடையே, கருத்து வேறுபாடு உள்ளது. எனினும், அந்நிறுவனத்திற்கு, மாநில அரசு, முழு ஆதரவை அளித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவில் தொழில் துவங்கும் அன்னிய நிறுவனங்கள், 30 சதவீதம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும். இந்த நிபந்தனையை தளர்த்தும்படி, ஆப்பிள் நிறுவனம் விடுத்த கோரிக்கையை,மத்திய அரசு ஏற்கவில்லை.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|