பதிவு செய்த நாள்
26 அக்2017
16:08

புதுடில்லி : ஆப்பிள் சாதனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி சப்போர்ட் சிறப்பானதாக இருக்கும். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் வெளிநாடுகளில் வாங்கிய அன்லாக் செய்யப்பட்ட ஐபோன்களை வாரன்டி மூலம் இந்தியாவிலேயே சரி செய்து கொள்ள முடியும். இதனால் அமெரிக்கா அல்லது மற்ற நாடுகளில் ஐபோன் வாங்கியிருந்தால் ஆப்பிள் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களில் சரி செய்ய முடியும். பொதுவாக வெளிநாடுகளில் வாங்கப்பட்ட ஐபோன்களை ஆப்பிள் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களில் சரி செய்யப்படாத சூழல் நிலவி வந்தது.
முன்னதாக மேக் கம்ப்யூட்டர்கள், ஐபாட், ரவுட்டர்கள் மற்றும் ஐபேட் சாதனங்களுக்கு மட்டும் சர்வதேச வாரண்டி வழங்கப்பட்டு வந்தது. எனினும் ஆப்பிள் விதிமுறை மற்றும் நிபந்தணைகளால் இந்த பட்டியலில் ஐபோன்கள் நீண்ட காலமாக சேர்க்கப்படாமல் இருந்தது. ஆப்பிள் இந்தியாவின் விதிமுறை மாற்றம் மற்ற நாடுகளில் அமலாக்கப்படுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
ஆப்பிள் ஆண்டுவிழா பிரத்தியேக பதிப்பான ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்க இருக்கும் நிலையில் இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் முதல் முறையாக மற்ற நாடுகளை போன்று ஐபோன் எக்ஸ் முதற்கட்டமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் ஐபோன் எக்ஸ் முன்பதிவு இன்று துவங்கி, விற்பனை நவம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|