பதிவு செய்த நாள்
26 அக்2017
16:23

மும்பை : பங்குச்சந்தை வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு, இந்திய பங்குச்சந்தைகள் நேற்று புதிய உச்சத்தை தொட்டன. இன்றைய காலை நேர வர்த்தகத்தின் போது உச்சத்துடன் காணப்பட்ட போதிலும், நிதித்துறை மற்றும் காப்பீட்டு துறை நிறுவன பங்குகளின் சரிவின் காரணமாக, சரிவுடன் வர்த்தகத்தை துவக்கின.
இன்றைய பிற்பகல் வர்த்தகத்தின் போது, நவம்பர் மாத வர்த்தகம் மற்றும் முதலீடுகள் மீது புதிய நம்பிக்கை ஏற்பட்டதாலும், பெரு நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன. இதன் காரணமாக பங்குச்சந்தைகள் மீண்டும் ஏற்ற பாதைக்கு திரும்பின. இதனால் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 104.63 புள்ளிகள் உயர்ந்து 33,147.13 புள்ளிகளாகவும், நிப்டி 48.40 புள்ளிகள் உயர்ந்து 10,343.80 புள்ளிகளாகவும் உள்ளன.
மாருதி சுசுகி, எச்டிஎப்சி, பார்தி இன்பிராடெல், ஐஓசி, பிபிசிஎல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 1 முதல் 5 சதவீதம் வரை உயர்வுடன் காணப்பட்டன. எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|