பதிவு செய்த நாள்
26 அக்2017
23:42

நியூயார்க் : அமெரிக்காவைச் சேர்ந்த, அமேசான் நிறுவனம், ‘அமேசான் பிரைம்’ வாடிக்கையாளர்களுக்கு, புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
இதன்படி, அமேசான் வலைதளத்தில், ஒருவர், பொருட்களுக்கு, ‘ஆர்டர்’ கொடுத்து, வெளியூர் சென்று விட்டாலும், அவர் வீட்டை திறந்து, பொருட்கள், ‘டெலிவரி’ செய்யப்படும்.இந்த வசதியை பெற, அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள், ஒரு கண்காணிப்பு கேமராவும், நிறுவனத்திடம் இருந்து, ‘வை – பை’ வசதி கொண்ட பூட்டையும் வாங்க வேண்டும்.
அமேசான் விற்பனை பிரதிநிதி, வீட்டின் பூட்டை திறந்து, ‘ஆர்டர்’ செய்த பொருட்களை, உள்ளே வைத்து விட்டு செல்வார். அவரது செயல்பாடுகள் அனைத்தும், கண்காணிப்பு கேமராவில் பதிவாகும். இதை, அமேசான் வாடிக்கையாளர், வெளியூரில் இருந்த படி, மொபைல் போனில் பார்க்கலாம்.
பாதுகாப்பு கருதி, வீட்டின் பூட்டை திறக்கும் குறியீடு, ஒருமுறை தான் வழங்கப்படும். இத்தகயை பணிக்கு, வாகன ஓட்டுனர்களை பயன்படுத்த, அமேசான் திட்டமிட்டு உள்ளது.நவ., 8 முதல், அட்லாண்டா, கிளீவ்லேண்டு, டென்வர் உள்ளிட்ட, 37 நகரங்களில், இச்சேவை அறிமுகமாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|