பதிவு செய்த நாள்
26 அக்2017
23:48

புதுடில்லி : ‘‘ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியால், நீண்ட கால அடிப்படையில், நுகர்வோர் அதிக பயன் பெறுவர்,’’ என, பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
அவர், டில்லியில், கிழக்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின், சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு மாநாட்டை துவக்கி வைத்து, மேலும் பேசியதாவது: நுகர்வோரின் எதிர்பார்ப்புகளை, எப்படி பூர்த்தி செய்வது என்பது குறித்து விவாதிக்க உள்ளதால், இந்த மாநாடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. நுகர்வோர் பாதுகாப்பு என்பது, ஒரு நாட்டின் நிர்வாகத்தில், பிரிக்க முடியாத அங்கமாகும்.
வேத நுால்களில் கூட, நுகர்வோர் பாதுகாப்பு வலியுறுத்தப்பட்டு உள்ளது. உருவாக்கப்படும் புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில், பெருமளவு, நுகர்வோருக்கு சுயாதிகாரம் அளிக்கும் அம்சங்கள் இடம் பெறும். தவறாக வழிநடத்தும் விளம்பரங்களுக்கான விதிமுறைகள், கடுமையாக இருக்கும்.
புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான, நம் தொலைநோக்கு பார்வை விசாலமானது. அதில், நுகர்வோர் பாதுகாப்பு என்ற அம்சத்தை தாண்டி, மிகச் சிறந்த நுகர்வோர் செயல்முறைகள் மற்றும்நுகர்வோர் வளம் என்ற அம்சங்களை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம்.நுகர்வோருக்கு அதிக அதிகாரம் அளிப்பது; அவர்கள், தொல்லையின்றி பொருட்கள் வாங்குவதை உறுதிப்படுத்துவது ஆகியவை, அரசின் இலக்காகும். இதை, நுகர்வோருக்கு வளம் சேர்க்கும் வகையில், மாற்றிக் காட்டுவோம்.
ஜி.எஸ்.டி., நிறுவனங்களிடையே போட்டியை அதிகரிக்கும். இதன் விளைவாக, பொருட்கள் விலை குறையும்.இதனால், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நுகர்வோர், அதிகளவில் பயன் பெறுவர்.ஜி.எஸ்.டி., பல்வேறு மறைமுக வரிகளை ஒழித்து கட்டியது. சரக்கு மற்றும் சேவை வரியில், அதிக அளவிலான பயன்கள், மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த நுகர்வோருக்கு கிடைக்கும்.
ஒரு ஜனநாயக நாட்டில், வலுவான குறை தீர்ப்பு நடைமுறைகள் முக்கியமானவை. அதனால், நாங்கள் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து, வலுவான குறை தீர்ப்பு நடைமுறைகளை உருவாக்கி வருகிறோம். இது, நுகர்வோர், தங்கள் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் இருக்கும்.மத்திய அரசின், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளால், பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. இதனால், நுகர்வோரின்செலவு மிச்சமாகிறது.
கிராமப்புற நுகர்வோரிடையே, ‘டிஜிட்டல்’ தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்க, மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|