பதிவு செய்த நாள்
27 அக்2017
10:14

மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (அக்.,27) இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. முக்கிய நிறுவன பங்குகளின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதே பங்குச்சந்தைகளின் இந்த தொடர் உச்சத்திற்கு காரணம் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 83.71 புள்ளிகள் உயர்ந்து 33,230.84 புள்ளிகளாகவும், நிப்டி 15.10 புள்ளிகள் உயர்ந்து 10,358.90 புள்ளிகளாகவும் உள்ளன. கோடாக் மகேந்திரா வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, இன்போசிஸ், டாடா மோட்டார்கஸ், சிப்லா, பிபிசிஎல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 1 முதல் 2 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. அதே சமயம் எஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|