ஒரே மாதத்தில் ரூ.19,000 கோடியை தாண்டியது - மின்னணு வணிக நிறுவனங்கள் விற்பனையில் புதிய சாதனைஒரே மாதத்தில் ரூ.19,000 கோடியை தாண்டியது - மின்னணு வணிக நிறுவனங்கள் ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.89 ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.89 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கமாடிட்டி சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2017
01:05

கச்சா எண்­ணெய் விலை, தொடர்ந்து கடந்த மூன்று வாரங்­க­ளாக உயர்ந்த வண்­ணம் உள்­ளது. ஒபெக் கூட்­ட­மைப்­பின் உறுப்பு நாடு­கள் மற்­றும் ரஷ்யா ஆகி­யவை இணைந்து, உற்­பத்தி குறைப்பு நட­வ­டிக்­கையை எடுத்­தது. அதன்­படி, 2016 நவம்­பர் முதல், 2017 ஜூன் வரை, 1.8 மில்­லி­யன் பேரல் அள­வுக்கு உற்­பத்தி குறைக்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டது. ஆனால், அச்­ச­ம­யத்­தில் பல உறுப்பு நாடு­கள், உற்­பத்தி குறைப்பை சரி­வர செயல்­ப­டுத்­த­வில்லை. இத­னால், சந்­தை­யில் கச்சா எண்­ணெய் விலை, எதிர்­பார்த்த அள­வுக்கு உய­ர­வில்லை. கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக ஒரு பேரல், 40 டாலர் முதல், 55 டாலர் என்ற அள­வில் வர்த்­த­க­மா­கிக் கொண்­டி­ருக்­கிறது.

நைஜீ­ரியா, லிபியா மற்­றும் சில வளை­குடா நாடு­களும் உற்­பத்தி குறைப்பை நடை­மு­றைப்­ப­டுத்த தவ­றி­விட்­டது.இதன் பிறகு, ஒபெக் நாடு­களின் கூட்­டத்­தில் உற்­பத்தி குறைப்­பா­னது, 2018 மார்ச் மாதம் வரை நீட்­டிக்­கப்­படும் என்ற அறி­விப்பு வெளி­யா­னது. இதன் பிறகு விலை­யில் சிறிய மாற்­றம் காணப்­பட்­டது.அடுத்த மாதம், 7 மற்­றும், 30 தேதி­களில் நடை­பெற உள்ள, ஒபெக் கலந்­தாய்வு கூட்­டத்­தில், உற்­பத்தி குறைப்பு மேலும் நீட்­டிக்­கப்­படும்; அதா­வது, 2018 மார்ச் மாதம் வரை நீட்­டிக்­கப்­படும் என்ற எதிர்­பார்ப்பு நில­வு­கிறது. இதற்கு ஏற்­றாற்­போல் உல­கின் மிகப்­பெ­ரிய எண்­ணெய் உற்­பத்தி நாடான, சவு­தி­யும் உற்­பத்தி குறைப்­புக்கு துணை நிற்­கும் என்ற செய்தி பர­வி­யது. சவுதி அர­சர் கடந்த வியா­ழன் அன்று இதை உறு­திப்­ப­டுத்­தி­னார். இதன் கார­ண­மாக, சந்­தை­யில் எண்­ணெய் விலை திடீ­ரென்று உயர்ந்­தது.வரும் நாட்­களில் கச்சா எண்­ணெய் விலை உயர வாய்ப்­புள்­ளது. அடுத்த இலக்கு, 55 டாலர் மற்­றும், 58 டாலர் ஆகும்.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 3,435 3,378 3,545 3,610என்.ஒய்.எம்.இ.எக்ஸ்., (டாலர்) 52.50 51.00 55.40 57.00

தங்கம், வெள்ளி:
தங்­கம் மற்­றும் வெள்ளி விலை, தொடர்ந்து இரண்­டா­வது வார­மாக சரிவை சந்­தித்து, வியா­பா­ரம் முடிந்­துள்­ளது. சர்­வ­தேச சந்­தை­யில், தங்­கம் ஒரு அவுன்ஸ், 1,273 டாலர் மற்­றும் வெள்ளி ஒரு அவுன்ஸ், 16.85 டாலர் என்ற அள­வில் உள்­ளது. இது செப்­டம்­பர் மாத உச்­சத்­தில் இருந்து, 5 சத­வீ­தம் விலை குறை­வா­கும்.அமெ­ரிக்க நாணய குறி­யீ­டான, டாலர் இண்­டெக்ஸ், அதன் சரி­வில் இருந்து மீண்டு, 11 மாத உச்­சத்தை தொட்­ட­தின் விளை­வாக, தங்­கம் மற்­றும் வெள்ளி ஆகி­ய­வற்­றின் விலை சரிய ஆரம்­பித்­தது. ஆனால், வார இறு­தி­யில் சரி­வி­லி­ருந்து மீண்­டன. கடந்த வெள்­ளி­யன்று, ஸ்பெ­யின் நாட்­டோடு இருந்து வந்த, கேட்­டி­லோ­னியா தன் சுதந்­தி­ரத்தை அறி­வித்­தது. இதை­ய­டுத்து, ஐரோப்­பா­வில் ஏற்­பட்ட அசா­தா­ரண சூழல் கார­ண­மாக, முத­லீட்­டா­ளர்­கள் தங்­கம் மீது முத­லீடு செய்­த­னர்.

கடந்த வியா­ழன் அன்று நடை­பெற்ற, ஐரோப்­பிய மத்­திய வங்­கி­யின் நிதி கூட்­டத்­தில், வட்டி விகி­தம் மாற்­றம் இல்லை என அறி­விக்­கப்­பட்­டது. மேலும், அரசு கரு­வூ­லங்­களின் கொள்­மு­தல் நீட்­டிக்­கப்­படும் என்ற அறி­விப்­பும் வெளி­யா­னது. 2018ம் ஆண்டு, ஜன­வரி முதல் செப்­டம்­பர் வரை மாதம், 30 மில்­லி­யன் யூரோ பத்­தி­ரங்­கள் வாங்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. பேங்க் ஆப் இங்­கி­லாந்­தின் அடுத்த நிதிக் கூட்­டம் நவம்­பர் 2ம் தேதி நடை­பெற உள்­ளது. இக்­கூட்­டத்­தில் வெளி­யா­கும் அறி­விப்பு சந்­தை­யில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தும்.அமெ­ரிக்க அரசு கரு­வூ­லங்­களின் ஆதா­யம் குறை­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அப்­படி குறைந்­தால், வரும் நாட்­களில் தங்­கம் மற்­றும்வெள்ளி ஆகி­ய­வற்­றின் விலைக்கு அது சாத­க­மாக அமை­யும்வரும் வெள்­ளி­யன்று வெளி­வர உள்ள, அமெ­ரிக்க பொரு­ளா­தார காரணி (என்.எப்.பி.,)மற்­றும் அதன் முடி­வு­கள் சந்­தை­யில் அதி­கப்­ப­டி­யான தாக்­கத்தை உண்­டாக்­கும்.
தங்கம்:பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 29,210 29,010 29,380 29,650காம்எக்ஸ் (டாலர்) 1,262 1,250 1,280 1,291

வெள்ளி:பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 38,950 38,400 39,400 40,050காம்எக்ஸ் (டாலர்) 16.55 16.10 16.95 17.10

செம்பு:
செம்பு விலை, நான்கு வார தொடர் உயர்­வுக்கு பின், கடந்த வாரம் சரி­வில் முடி­வ­டைந்­தது. வியா­பா­ரங்­களில் மேற்­கொண்ட, லாபத்தை எடுக்­கும் முடிவு கார­ண­மாக விலை சரிந்­தது.இந்த ஆண்­டின் துவக்­கம் முதலே, செம்­பின் விலை உயர்ந்தே இருந்­தது. இன்­னும் சொல்­வ­தென்­றால் கடந்த ஓர் ஆண்­டா­கவே விலை உயர்ந்து இருந்­தது. அதா­வது, 2016 அக்­டோ­பர் முதல் இந்த அக்­டோ­பர் வரை, 54 சத­வீ­தம் அள­வுக்கு விலை உயர்ந்­துள்­ளது. உல­கின் பெரிய நாடு­களில் ஏற்­பட்ட தொழிற்­துறை வளர்ச்சி கார­ண­மா­க­வும், சுரங்க உற்­பத்­தி­யில் ஏற்­பட்ட சிறு தொய்­வும் இதற்கு கார­ண­மாக அமைந்­தது. ஜூன் மாதம் முதல் கடந்த ஐந்து மாதங்­களில் விலை அதி­கப்­ப­டி­யான உயர்வை கண்­டது.
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 443.50 438.00 450.00 456.00

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)