பதிவு செய்த நாள்
31 அக்2017
05:24

ஐதராபாத், அக். 31–‘‘உலகிலேயே முதன்முறையாக, ‘ரோபோ’வுக்கு, குடிமகள் உரிமையை சவுதி அரேபியா வழங்கி உள்ளதன் மூலம், இனி, செயற்கை நுண்ணறிவு, ‘சாப்ட்வேர்’ பயன்பாடு, காலத்தின் கட்டாயம் என்பது நிரூபணமாகி உள்ளது,’’ என, ‘நாஸ்காம்’ தலைவர், ஆர்.சந்திரசேகர் தெரிவித்து உள்ளார்.அவர், மேலும் கூறியதாவது:திறன்மனிதர்கள் செய்து வந்த பல வேலைகளை, ‘ரோபோ’க்களாலும் செய்ய முடியும் என்ற சூழலுக்கு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வித்திட்டுள்ளது. சவுதி அரேபியா, ‘சோபியா’ என்ற ரோபோவுக்கு, மரியாதையின் அடையாளமாக, குடிமகள் உரிமையை வழங்கி உள்ளது.அதே சமயம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மனிதர்கள் செய்யக்கூடிய, பல வேலைகளை செய்யும் திறனை எட்டியுள்ளது.வேலைவாய்ப்புஇத்தகைய, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் சாப்ட்வேர்கள், மனிதர்களின் வேலையை பறிப்பதாக கூறப்படுகிறது.ஆனால், அவை, மனிதர்களின் வேலையை பறித்ததை விட, அதிகஅளவில் வேலையை உருவாக்கி உள்ளது தான் உண்மை. ஒரே மாதிரி, தொடர்ந்து செய்யக்கூடிய வேலைகளைத் தான், மனிதர்களிடம் இருந்து, செயற்கை நுண்ணறிவு சாப்ட்வேர் இயந்திரங்கள் பறிக்கின்றன. எந்த வேலையை பறித்தாலும், புதிய வேலைவாய்ப்பை, அவை உருவாக்கித் தருகின்றன.‘கூரியர்’ பணிஉதாரணமாக, மின்னணு வணிக நிறுவனங்களால், கடைகளில் பொருட்களை விற்போர் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், மின்னணு வணிக நிறுவனங்களால், ‘கூரியர்’ பணியில், ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் வரை, ‘ட்ரோன்’ எனப்படும், ஆளில்லா குட்டி விமானங்களை இயக்குவோர் யாரும் இல்லை. தற்போது, இப்பிரிவில் ஏராளமானோருக்கு, வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|