பதிவு செய்த நாள்
31 அக்2017
05:24

புதுடில்லி : மகிந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீடு, இன்று துவங்குகிறது. பங்கு ஒன்றின் விலை, 425 – 429 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்நிறுவனத்தைச் சேர்ந்த, தகுதியுள்ள ஊழியர்களுக்கு, பங்கு ஒன்றுக்கு, 42 ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. முதலீட்டாளர்கள், குறைந்தபட்சம், 34 பங்குகள் வீதம் முதலீடு செய்யலாம்.அதிகபட்ச பங்கு விலையில், இந்நிறுவனம், 829.35 கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மகிந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீடு, நவ., 3ல் முடிவடைகிறது.இந்த பங்கு வெளியீட்டின் மூலம், பங்குச் சந்தை பட்டியலில் இடம் பெறும், மகிந்திரா குழுமத்தைச் சேர்ந்த, ஏழாவது நிறுவனம் என்ற சிறப்பு, மகிந்திரா லாஜிஸ்டிக்சுக்கு கிடைக்கும்.ஏற்கனவே, மகிந்திரா குழுமத்தைச் சேர்ந்த, மகிந்திரா அண்டு மகிந்திரா, டெக் மகிந்திரா, மகிந்திரா அண்டு மகிந்திரா பைனான்சியல் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் பங்குச்சந்தை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.மேலும், மகிந்திரா ஹாலிடேஸ் அண்டு ரிசோர்ட்ஸ் இந்தியா, மகிந்திரா, சி.ஐ.இ., ஆட்டோமோட்டிவ் மற்றும், இ.பி.சி., இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள், பங்குச் சந்தை பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|