பதிவு செய்த நாள்
31 அக்2017
05:25

புதுடில்லி : நாட்டில், தொழில் துவங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில், நவ., 9ம் தேதியை, தேசிய தொழில் முனைவோர் தினமாக கொண்டாட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இது குறித்து, மத்தியஅரசின், மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாட்டில், இளைஞர்களிடையே தொழில் முனைவோர் குறித்து, ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், நவ., 9ல், தேசிய தொழில் முனைவோர் தினம் கொண்டாடப்பட உள்ளது.இதன்படி, நாடு முழுவதும், தொழில் முனைவோருக்கான போட்டிகள், நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதில் வெற்றி பெறுவோருக்கு, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை சார்பில், தேசிய தொழில் முனைவோர் தினமான, நவ., 9ல், பரிசுகள் வழங்கப்படும். இதன் மூலம், சிறந்த தொழில் முனைவோர் ஊக்குவிக்கப்படுவர்.நாட்டில் உள்ள சாதகமான வர்த்தகச் சூழலை பயன்படுத்தி, இளைஞர்கள், தொழில் துவங்க முன் வர வேண்டும். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய, மத்திய அரசு தயாராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|