பதிவு செய்த நாள்
01 நவ2017
04:49

புதுடில்லி : வரும், 2035க்குள், ஒப்பனை மற்றும் அலங்கார பொருட்கள் சந்தை மதிப்பு, 2.27 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும்’ என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.இது குறித்து, அசோசெம் – எம்.ஆர்.எஸ்.எஸ்., இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:இந்தியாவில், இளைஞர்களிடையே, ஒப்பனை பொருட்கள் குறித்த ஆர்வம், மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது, ஒப்பனை பொருட்கள் சந்தை மதிப்பு, 42,250 கோடி ரூபாயாக உள்ளது. இது, 2035க்குள், 2.27 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மூலிகையிலான ஒப்பனை பொருட்கள் வாங்குவதில், இந்திய மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், இச்சந்தை மதிப்பு, 12 சதவீதம் அதிகரிக்கும்.ஆய்வில், 68 சதவீத இளைஞர்கள், ஒப்பனை பொருட்களை பயன்படுத்துவதால், தங்கள் நம்பிக்கை அதிகரிப்பதாக தெரிவித்தனர். மேலும், பெரிய நகரங்களில், 62 சதவீத இளைஞர்கள், ஒப்பனை பொருட்களை, ‘ஆன் – லைன்’ மூலம் வாங்குவதாகவும்; 45 சதவீதத்தினர், கடைகளில் வாங்குவதாகவும் தெரிவித்து உள்ளனர்.இந்திய ஆண்கள் அலங்காரம் மற்றும் ஒப்பனை துறை, ஐந்து ஆண்டுகளில், 42 சதவீதத்திற்கும் மேல் வளர்ச்சி கண்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|