தரமற்ற எல்.இ.டி., பல்புகள் தயாரிப்புதரமற்ற எல்.இ.டி., பல்புகள் தயாரிப்பு ... ரூபாயின் மதிப்பும் உயர்வு : ரூ.64.63 ரூபாயின் மதிப்பும் உயர்வு : ரூ.64.63 ...
உலக வங்கி பட்டியலில் ‘டாப் – 100’ல் நுழைந்தது இந்தியா - எளிதாக தொழில் துவங்க ஏற்ற நாடுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2017
04:52

புது­டில்லி : உல­க­ள­வில், தொழில் துவங்­கு­வ­தற்கு எளி­தான சூழல் உள்ள நாடு­கள் பட்­டி­ய­லில், இந்­தியா, 30 இடங்­கள் முன்­னேறி, முதல், 100 இடங்­க­ளுக்­குள் வந்து விடும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது, நிறை­வேறி இருக்­கிறது.ஒவ்­வொரு ஆண்­டும், உலக வங்கி, தொழில் துவங்­கு­வ­தற்கு, எளி­தான சூழல் உள்ள நாடு­களின் பட்­டி­யலை வெளி­யி­டு­கிறது. கடந்த ஆண்­டில் வெளி­யான, 190 நாடு­கள் கொண்ட பட்­டி­ய­லில், இந்­தியா, 130வது இடத்­தில் இருந்­தது. அதற்கு முந்­தைய ஆண்டு பட்­டி­ய­லில், 131வது இடத்­தில் இருந்­தது. 2004ம் ஆண்­டில் 142 வது இடத்­தில் இருந்­தது.ஜி.எஸ்.டி.,ஓராண்­டில், பிர­த­மர் மோடி தலை­மை­யி­லான, தே.ஜ., கூட்­டணி அரசு மேற்­கொண்ட, மூன்று முக்­கிய பொரு­ளா­தார சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­க­ளால், முதல், 100 இடங்­க­ளுக்­குள், இந்­தியா வந்­து­வி­டும் என்ற நம்­பிக்கை ஏற்­பட்டு உள்­ள­தாக, வல்­லு­னர்­கள் தெரி­விக்­கின்­ற­னர். இதற்கு, அவர்­கள் பல்­வேறு கார­ணங்­களைஅடுக்­கு­கின்­ற­னர்.ஜூலை முதல் அமல்­ப­டுத்­தப்­பட்டு வரும், ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி, இது­வரை இருந்த, குழப்­ப­மான பல­முனை வரி விதிப்பு முறை­யில் இருந்து, முற்­றி­லும் மாறு­பட்டு, மிக­வும் எளி­மை­யாக்­கப்­பட்டு உள்­ளது.திவால் சட்­டம்நாடெங்­கும் ஒரே சீரான, ஒற்றை வரி விதிப்பு முறை­யா­லும், தேவை­யற்ற அர­சாங்க தலை­யீ­டு­கள் குறை­வ­தா­லும், ஏரா­ள­மான வெளி­நாட்டுமுத­லீட்­டா­ளர்­களும், நிறு­வ­னங்­களும், இந்­தி­யா­வுக்­குள், தம் வர்த்­தக நட­வ­டிக்­கை­களை துவங்க காத்­துக் கொண்டு இருக்­கின்றன.அடுத்து, புதிய திவால் சட்­டம் நிறை­வேற்­றப்­பட்­ட­தற்கு பின், இந்­தி­யா­வின் பலம் பல மடங்கு உயர்ந்­துள்­ளது. அது, வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள் மத்­தி­யில், நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தி உள்­ளது. தங்­கள் முத­லீ­டு­கள் ஏதே­னும், ஒரு வகை­யில் பாதிப்பு அடை­யு­மா­னால், அதி­லி­ருந்து மீள்­வ­தற்கு, புதிய திவால் சட்­டம் உத­வும் என்­பது, முத­லீட்­டா­ளர்­கள் நம்­பிக்கை.அடுத்­த­தாக, கட்­டட அனு­மதி பெறு­வது முதல், தொழில் துவங்க தேவைப்­படும்,பல்­வேறு அனு­ம­தி­களைபெறு­வ­தற்­கான வழி­மு­றை­கள், மத்­திய அர­சின், வர்த்­த­கத் துறை அமைச்­ச­கத்­தால், மிக­வும்எளி­மைப்­ப­டுத்­தப்­பட்டுஉள்­ளது.இத­னால், வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள், இந்­தி­யா­வில் பதிவு செய்து கொள்­வ­தும், தொழில் துவங்­கு­வ­தும் விரை­வாகநடை­பெ­றும்.எதிர்­பார்ப்பு‘மேக் இன் இந்­தியா’திட்­டத்தை, மத்­திய அரசு பிர­ப­லப்­ப­டுத்தி வரும் நிலை­யில், தொழில் துவங்­கு­வ­தற்கு உகந்த சூழல் நில­வும் நாடு­களின்பட்­டி­ய­லில், இந்­தியா முன்­னே­று­வது மிக­வும் அவ­சி­ய­மா­கும். ஓராண்­டாக, மத்­திய அரசு மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­கள், அதற்கு உறு­து­ணை­யாக இருக்­கும்.இத்­த­கைய கார­ணங்­க­ளால், உல­க­ள­வில், தொழில் துவங்­கு­வ­தற்கு எளி­தான சூழல் உள்ள நாடு­களின் பட்­டி­ய­லில், இந்­தியா, 30 இடங்­கள் முன்­னேறி டாப் – 100 நாடு­களில் ஒன்­றாகி இருக்­கிறது.இவ்­வாறு வல்­லு­னர்­கள் தெரி­வித்­த­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)