‘டார்க் ஸ்டோர்’ விற்பனை கிடங்கு வால்மார்ட் நிறுவனம் திறந்தது‘டார்க் ஸ்டோர்’ விற்பனை கிடங்கு வால்மார்ட் நிறுவனம் திறந்தது ... ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.53 ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.53 ...
‘டாலரை முறையின்றி குவிப்பதாக இந்தியாவை குற்றஞ்சாட்ட கூடாது’: அமெரிக்காவிற்கு ரகுராம் ராஜன் அறிவுரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2017
00:05

சிங்கப்பூர் : ‘‘இந்­தி­யாவை, வரம்பு மீறி டாலரை குவிக்­கும் நாடாக, அமெ­ரிக்கா முத்­திரை குத்­தக் கூடாது,’’ என, ரிசர்வ் வங்கி முன்­னாள் கவர்­னர், ரகு­ராம் ராஜன் வலி­யு­றுத்தி உள்­ளார்.

‘இந்­தியா, டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்பை நிலை­நி­றுத்த, அதிக அள­விற்கு டாலரை வாங்கி குவிக்­கி­றதா என்­பது, தீவி­ர­மாக கண்­கா­ணிக்­கப்­படும்’ என, சமீ­பத்­தில், அமெ­ரிக்க கரு­வூ­லத் துறை தெரி­வித்­தி­ருந்­தது.

இது குறித்து, ‘பார்க்­லேஸ் ஆசிய கூட்­ட­மைப்பு’ மாநாட்­டில் பங்­கேற்க, சிங்­கப்­பூர் வந்­தி­ருந்த, ரகு­ராம் ராஜன், செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது: ஜன., – ஜூன் வரை­யி­லான அரை­யாண்­டில், இந்­தி­யா­வின் நிகர டாலர் கொள்­மு­தல் அதி­க­ரித்­துள்­ளது. இந்த வகை­யில், மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில், 1.8 சத­வீ­தம், அதா­வது, 4,200 கோடி டாலர் வாங்­கப்­பட்டு உள்­ளது.இதை, வரம்பு மீறிய டாலர் குவிப்பு என, கூற முடி­யாது. ‘ஓராண்­டில், மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில், குறைந்­த­பட்­சம், 2 சத­வீத டாலரை, நிகர அள­வில் வாங்கி குவித்­தால் மட்­டுமே, அது, முறை­யற்ற அன்­னிய செலா­வணி பரி­வர்த்­தனை’ என, அமெ­ரிக்க கரு­வூ­லத் துறை வரை­ய­றுத்து உள்­ளது.அத­னால், இந்­தியா மீது, முறை­யற்ற வகை­யில், டாலரை வாங்கி குவிக்­கும் நாடு என்ற முத்­திரை குத்­தப்­படும் என, நான் எண்­ண­வில்லை.

அப்­ப­டியே, இந்­தியா, டாலரை அதி­கம் வாங்­கு­வ­தாக அமெ­ரிக்கா கரு­தி­னா­லும், அத்­த­கைய நட­வ­டிக்­கையை எடுக்­கக் கூடாது. ஏனெ­னில், இந்­தி­யா­வின் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, ஜூன் நில­வ­ரப்­படி, மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில், 2.4 சத­வீ­தம், அதா­வது, 1,430 கோடி டால­ராக உள்­ளது. இது, கச்சா எண்­ணெய் விலை உயர்ந்­தால், மேலும் அதி­க­ரிக்­கும். அதற்­கேற்ப, இந்­தியா, டாலரை அதி­கம் அளிக்க நேரி­டும். அதி­க­ள­வில் டாலர் வெளி­யே­றி­னால் ஏற்­படும் பாதிப்­பில் இருந்து தற்­காத்­துக் கொள்ள, அதன் கையி­ருப்பை அதி­க­ரித்­துக் கொள்­வது, ரிசர்வ் வங்­கிக்கு அவ­சி­ய­மா­கிறது.

மிகப்­பெ­ரிய நாடாக திக­ழும் இந்­தியா, டால­ருக்­காக, பன்­னாட்டு நிதி­யத்­தின் உத­வியை, அவ்­வப்­போது நாட முடி­யாது. அர­சி­யல் ரீதி­யா­க­வும், அத்­த­கைய நிலைப்­பாடு கடி­ன­மா­ன­தாக இருக்­கும். அத­னால், டாலர் கையி­ருப்பு அதி­க­ரிப்பு, இந்­தி­யா­வின் விவே­க­மான நட­வ­டிக்கை என­லாம். எந்­த­வொரு நாட்­டை­யும், ஓர் அள­வு­கோல் படி, முறை­யற்று கரன்­சியை குவிப்­ப­தாக கூற முடி­யாது. ரூபா­யின் பரி­வர்த்­தனை மதிப்பு, குறை­வா­கவே உள்­ள­தால், இந்­தி­யாவை யாரும் அவ்­வாறு குற்­றஞ்­சாட்­ட­வும் முடி­யாது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

3 அம்சங்கள்:
அமெ­ரிக்க கரு­வூ­லத் துறை, கீழ்­கண்ட மூன்று அம்­சங்­களின் அடிப்­ப­டை­யில், ஒரு நாட்டை, முறை­யற்ற அன்­னிய செலா­வணி பரி­வர்த்­த­னை­யில் ஈடு­ப­டு­வ­தாக, முத்­திரை குத்­து­கிறது.
* அமெ­ரிக்­கா­வு­ட­னான ஒரு நாட்­டின் பரஸ்­பர வர்த்­தக உபரி, குறைந்­த­பட்­சம், 2,000 கோடி டாலரை எட்­டி­னால்...
* மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில், நடப்பு கணக்கு உபரி, 3 சத­வீ­தத்தை தொட்­டால்...
* ஓராண்­டில், அன்­னிய செலா­வணி கொள்­மு­தல், மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில், 2 சத­வீ­த­மாக உயர்ந்­தால்...

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)