ஒரு சவரன் தங்கம் விலை ரூ.22,500 ஐ கடந்ததுஒரு சவரன் தங்கம் விலை ரூ.22,500 ஐ கடந்தது ... மாலை நேர நிலவரம், தங்கம் - வெள்ளி விலையில் மாற்றமில்லை மாலை நேர நிலவரம், தங்கம் - வெள்ளி விலையில் மாற்றமில்லை ...
சாக்லேட், ஷாம்பூ உள்ளிட்ட 177 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2017
14:52

கவுகாத்தி : ஜிஎஸ்டி கவுன்சிலின் 23 வது ஆலோசனைக் கூட்டம், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று (நவம்பர் 10) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 177 பொருட்களின் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளன.

இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில், அன்றாடம் பயன்படுத்தக் கூடிய 200 க்கும் மேற்பட்ட பொருட்களின் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 28 சதவீதம் ஜிஎஸ்டி கொண்ட பொருட்கள் 18 சதவீதம் ஜிஎஸ்டி.,யின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன. ஷாம்பூ, பிளாஸ்டிக் பொருட்கள், சுகாதார பொருட்கள், சூட்கேஸ், காகிதம், எழுது பொருட்கள், வாட்ச்கள், இசைக் கருவிகள் உள்ளிட்டவைகளின் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஏசி ரெஸ்டாரன்ட்களில் வழங்கப்படும் உணவுகளின் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சாக்லேட்கள், சூயிங் கம், ஷாம்பூ, சோப்பு, ஷூ பாலிஷ், ட்யோடரென்ட், சத்துள்ள பானங்கள், மார்பிள், அழகு சாதன பொருட்கள் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான அழகு சாதன மூலப் பொருட்கள், ஷேவிங் மற்றும் ஷேவிங்கிற்கு பிறகு பயன்படுத்தும் பொருட்கள், சலவை பவுடர்கள், கிரானைட் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 50 பொருட்கள் மட்டுமே 28 சதவீதம் ஜிஎஸ்டி பிரிவின் கீழ் உள்ளன.


இருப்பினும் பெயிண்ட்கள், சிமெண்ட் ஆகியவை 28 சதவீதம் ஜிஎஸ்டி.,யின் கீழே வைக்கப்பட்டுள்ளன. வாஷிங் மேஷின், ஏசி போன்ற சொகுசு பொருட்களும் 28 சதவீதம் ஜிஎஸ்டி.,யின் கீழே வைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் ஜவுளி மற்றும் ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)